இரத்ததான தினத்தை முன்னிட்டு, இரத்த தான அமைப்பு ஒன்று குறும்பட போட்டிகளை நடத்த திட்டமிட்டிருக்கிறது. இதன் தொடக்கவிழா நேற்று சென்னையில் நடைப்பெற்றது. இதில் நடுவர்களான இயக்குநர்கள் ஏ.எல் விஜய், ராம், பாண்டியராஜன், நடிகர் விவேக் மற்றும் யூகிசேது ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
அப்போது இதில் பேசிய விவேக் ரத்த தானத்தை பற்றி பேசும் போதும், தனது காமெடி பேச்சுகளை வெளிப்படுத்தினார். இதன் விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்லும் விதமாக இரத்தம் கொடுத்தால் ஹன்சிகாவுடன் செல்ஃபி எடுக்கலாம், நயன்தாராவுடன் குல்ஃபி (குரூப்பாக) எடுக்கலாம் என வைத்தால் இரத்தம் அளவில்லாமல் குவியும், என நகைச்சுவையாக பேசினார்.
அதனை விட நமீதா என்று சொன்னால் அதனிலும் அதிக இரத்தம் கிடைக்கும் என்றும், எனக்கும் ஹன்சிகாவுடன் செல்ஃபி எடுக்க ஆசை என்றும் கூறினார்.
Related posts
No comments:
Post a Comment