பொதுவாக விஜய், அஜித் ரசிகர்கள் இவர்களின் படங்கள் வெளியானால் மட்டுமே மோதிக் கொள்வார்கள். ஆனால், நேற்று முழுவதும் இவர்களால் டுவிட்டர் கதிகலங்கி விட்டது.
பொதுவாக இவர்களின் மோதல் சமூக வலைத்தளங்களில் அதிகமாகவே இருக்கும், குறிப்பாக டிவிட்டரில் அவர்கள் மோதிக் கொள்ள ஆரம்பித்தால் அதை டிரெண்டிங்கில் கொண்டு வந்து பரபரப்பாக்கி விடுவார்கள். இப்படித்தான் நேற்று விஜய், அஜித் ரசிகர்கள் இருவருமே எதிரெதிரான இரண்டு 'ஹேஷ்டேக்'குகளை உருவாக்கி மாறி மாறி அதை டிரெண்டிங்கில் வர வைத்துவிட்டார்கள்.
இதற்கு சூர்யாவின் மாசு படம் தான் காரணம் என்று கூறப்படுகிறது. சூர்யா படம் வெளிவந்தாலே விஜய் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் சூர்யாவையும், அவரது படத்தையும் கிண்டலடிப்பது வழக்கமாகிவிட்டது. ஆனால் இந்த முறை சற்றே வேறுமாதிரி ஆகிவிட்டது.
விஜய் ரசிகர்கள் இந்த முறை சூர்யா ரசிகர்களுடன் சேர்ந்து விட்டனர். காரணம், ’மாசு’ படத்தில் விஜய்யின் மாஸ் கலந்திருப்பதால் தான். மேலும், அஜித்தின் மாஸ் பின்னணி இசையை காமெடி நடிகரின் அறிமுக காட்சிக்கு பயன்படுத்தியிருந்ததால், அஜித் ரசிகர்கள் கடுப்பாகி விட்டனர். இதுவே இவர்களின் மோதலுக்கு ஆரம்பமாக அமைந்தது.
நேற்று அஜித் ரசிகர்கள் "#whyvijayandhisfansareshameless" என்ற ஹேஷ்டேக்கையும், விஜய் ரசிகர்கள் "#whyajithandhisfansarementals" என்ற ஹேஷ்டேக்கையும் உருவாக்கி அவற்றை சென்னை அளவில் டிரெண்டிங்கில் வரவைத்து விட்டனர். நேற்று இந்த மோதலால் டுவிட்டரே கலங்கி விட்டது.
No comments:
Post a Comment