Thursday, 4 June 2015

இன்றைய தினம்..!!(ஜூன் 5)


ஜூன் 5
உலக சுற்றுச் சூழல் தினம்!!!
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளின் அடிப்படையில் சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச் சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் அமைப்பு, ஜூன் 5ம் தேதியை பல்வேறு கருத்துக்களை வலியுறுத்தி கொண்டாடியுள்ளது. உலக சுற்றுச் சூழல் தினத்தின் கொண்டாட்டங்களுக்குப் பொறுப்பாக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (UNEP) செயற்படுகின்றது.
மனிதகுலம், விலங்கினம், பறவையினம், தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள் போன்றவற்றின் நல்வாழ்வு இந்த சுற்றுச் சூழலின் சமநிலையிலேயே தங்கியுள்ளது. புவி வெப்பமடைந்து வருவதும் ஓசோன் படையில் ஓட்டை விழுந்துள்ளது என்ற தகவலும் சுற்றுச் சூழலின் சமநிலையில் ஏற்பட்ட பின்விளைவுகளாக வருத்தம் கொள்ளவைக்கின்றன.
சுற்றுச் சூழல் தொடர்பாக காலநிலை மாற்றம், புவிக்கோளம் உஷ்ணமடைதல், ஓசோன் படை பாதிப்பு, நன்னீர் வளம், சமுத்திரம், கடற்கரைப் பிரதேசங்கள், காடழிப்பு, வனாந்திரமாக்கல், உயிரியல் மாறுபாடு , உயிரியல் தொழில்நுட்பம், சுகாதாரம், இரசாயன பாதுகாப்பு போன்றவை கவனம் செலுத்தப்படவேண்டியுள்ளது.
வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்:
1956 - இலங்கையில் சிங்களம் மட்டும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
1959 - சிங்கப்பூரின் முதலாவது அரசு பதவியேற்றது.
1977 - முதலாவது தனிக்கணினி ஆப்பிள் II விற்பனைக்கு விடப்பட்டது.

No comments:

Post a Comment