இங்கிலாந்தின் அலாஸ்டர் குக், டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த வயதில் 9,000 ரன்களை எடுத்த வீரர் என்ற பெருமையை தட்டிச் சென்றுள்ளார்.
30 வயதாகும், அலாஸ்டர் குக் ஹெடிங்லீயில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவருக்கு முன்பு இந்த சாதனையை புரிந்தது இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே.
அலாஸ்டர் குக் சச்சினை விட 94 நாட்கள் முன்னதாக இந்த சாதனையை புரிந்து சச்சினை பின் தள்ளியுள்ளார். 30 வயது, 159 நாட்களில் அலாஸ்டர் குக் 9,000 ரன்களை எட்ட, சச்சின் டெண்டுல்கர் தனது 9,000 டெஸ்ட் ரன்களை 30 வயது, 253 நாட்களில் எடுத்தார்.
சச்சின் டெண்டுல்கர் 2004-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னி டெஸ்ட் போட்டியில் அடித்த இரட்டைச் சத இன்னிங்ஸ் மூலம் 9,000 ரன்களைக் கடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்: எளிதில் யாராலும் முறியடிக்க முடியாத சச்சினின் 7 சாதனைகள்!!!
ஆனால் 31 வயதுக்கு முன்பாகவே டெஸ்டில் 9,000 ரன்களை எடுத்த வீரர்கள் சச்சின் மற்றும் குக் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், சங்கக்காரா 172 இன்னிங்ஸ்களிலும், ராகுல் டிராவிட் 176 இன்னிங்ஸ்களிலும் பிரையன் லாரா 177 இன்னிங்ஸ்களிலும் ரிக்கி பாண்டிங் 177 இன்னிங்ஸ்களிலும் மகேலா ஜெயவர்தனே 178 இன்னிங்ஸ்களிலும் 9,000 டெஸ்ட் ரன்கள் மைல்கல்லை எட்ட, சச்சின் 179 இன்னிங்ஸ்களில் எடுத்து 6-ம் இடத்தில் உள்ளார்.
இவருக்குப் பின்னால் ஜாக் காலிஸ் (188), சுனில் கவாஸ்கர் (192), கிரேம் ஸ்மித் (195), அலாஸ்டர் குக் (204), ஆலன் பார்டர் (207), ஸ்டீவ் வாஹ் (216), சந்தர்பால் (216) ஆகியோர் உள்ளனர்.

No comments:
Post a Comment