Maggi நூடுல்ஸினை 5 மாநிலங்களில் தடை செய்யப்பட்டதை தொடர்ந்து நெஸ்லே நிறுவனம் நூடுல்ஸ்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
உணவுப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான நெஸ்லேவின் தயாரிப்புகளில் ஒன்றான Maggi நூடுல்ஸில் அதிகபடியான ’மோனோ சோடியம் குளுட்டாமேட்’ இருப்பது கண்டறிப்பட்டது. இது உடலுக்கு மிகவும் கேடு விளைவிக்கக் கூடியது என்று கூறி உத்திரப்பிரதேச மாநிலத்தில் தடை செய்யப்பட்டது.
தொடர்ந்து பல மாநிலங்களில் அதனை சோதனை செய்ய ஆரம்பித்தனர். சோதனை முடிவில் Maggi நூடுல்ஸ் உண்பதற்கு ஏற்றதல்ல என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், Maggi நூடுல்ஸ் டெல்லி, ஜார்கண்ட், காஷ்மீர், கேரளா போன்ற மாநிலங்களில் Maggi நூடுல்ஸ் தடை விதிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்: பெண்களுக்கு ஆண்களிடம் பிடிக்காத விஷயங்கள் என்னென்ன??
மேலும், தமிழகத்தில் Maggi உட்பட மேலும் 3 நிறுவனங்களில் நூடுல்ஸுக்கு 3 மாத தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், நெஸ்லே நிறுவனம் Maggi நூடுல்ஸை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
“எங்களுடைய முதல் முன்னுரிமையானது எங்களது நுகர்வோரின் நம்பிக்கை மற்றும் பாதுகாப்புக்கானது. துரதிஷ்டவசமாக Maggi நூடுல்ஸ் மீதான சமீபகால தகவல்கள் மற்றும் அரியப்படாத கவலைகள் விவகாரம் நுகர்வோர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த வழிவகைசெய்து உள்ளது, தயாரிப்பில் பாதுகாப்பான இருக்கும்போதிலும், தற்போது Maggi நூடுல்ஸை திரும்பபெற முடிவுசெய்து உள்ளோம்," என்று நெஸ்லே நிறுவனம் தெரிவித்து உள்ளது.
No comments:
Post a Comment