தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருப்பவர் நடிகை நயன்தாரா. தற்போது இருக்கும் நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையும் இவர்தான். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த மாஸ் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படத்திற்கு பிறகு இது நம்ம ஆளு, தனி ஒருவன், மாயா, நானும் ரெளடிதான், காஷ்மோரா என பல படங்கள் அவருடைய நடிப்பில் வெளிவரவேண்டியுள்ளன. இதுதவிர மேலும் சில தயாரிப்பாளர்களும் அவரிடம் கால்சீட் கேட்டு துரத்திக்கொண்டிருக்கிறார்கள்.
அதோடு கடந்த ஓராண்டாக அனாமிகா பட பிரச்னையினால் ஆந்திர பட உலகில் ரெட் கார்டு போடப்பட்டிருந்ததால் எந்த தெலுங்கு படத்திலும் நடிக்காமல் இருந்த நயன்தாராவுக்கு இப்போது அந்த ஒரு வருட தடை நீங்கி விட்டது. அதனால் சிரஞ்சீவி நடிக்கும் 150-வது படம் உள்பட ஜூனியர் என்டிஆர் நடிக்கும் ஒரு படத்திலும் கமிட்டாகியிருக்கிறார்.
மேலும், கோலிவுட்டில் அனுஷ்கா, தமன்னா, காஜல்அகர்வால், ஹன்சிகா என பல முன்னணி நடிகைகள் இருந்தபோதும், நயன்தாராவிடம் கால்சீட் கேட்டு தயாரிப்பாளர்கள் துரத்துவதற்கு இன்னொரு முக்கிய காரணமும் உள்ளதாம்.
அதாவது தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நயன்தாராவுக்கு இன்னமும் நல்ல கிரேஸ் உள்ளதாம். அதனால் அவர் நடிக்கும் தமிழ் படங்களை தெலுங்கில் டப் செய்து வெளியிடும்போது பெரிய அளவில் வசூலிக்கிறதாம். அதனால்தான், அவர் கேட்கிற சம்பளத்தைக் கொடுத்து புக் பண்ணுகிறார்களாம் கோலிவுட் படஅதிபர்கள்.
No comments:
Post a Comment