Friday, 5 June 2015

ஜெ., வழக்கில் மீண்டும் ஆச்சார்யா!!? அடுத்த மாதம் மேல் முறையீடு: கர்நாடக அரசு!!!


ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஆஜராக ஆச்சாரியாவை நியமித்து கர்நாடக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆச்சார்யாவுக்கு உதவ வழக்கறிஞர் சந்தேஷ் சவுடாவையும் கர்நாடக அரசு நியமித்து உத்தரவிட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய கர்நாடக அமைச்சரவை கடந்த திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது. இவ்வழக்கில், அரசு வழக்கறிஞராக ஹைகோர்ட்டில் ஆஜரான ஆச்சாரியாவையும், அவரின் உதவிக்காக வழக்கறிஞர் சந்தேஷ்சவுட்டாவையும் சுப்ரீம்கோர்ட்டிலும் தொடரச் செய்வது என கர்நாடக அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது.
இந்நிலையில், அதற்கான அரசு ஆணையை இன்று கர்நாடக அரசு வெளியிட்டது. கர்நாடக அரசு தொடரும் வழக்கு என்பதால், இந்த அரசாணை அவசியமாகும். ஜூலை 1ஆம் தேதிக்கு பிறகு மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு தரப்பு முடிவெடுத்துள்ளது.

No comments:

Post a Comment