Thursday, 4 June 2015

நடுரோட்டில் நடிகை நஸ்ரியா இப்படி பண்ணலாமா..?


தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் தனக்கென்று ஒரு முன்னணி இடத்தை பிடித்தவர் நடிகை நஸ்ரியா. தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்திருந்த இவர் சில மாதங்களுக்கு முன்பு பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துக்கொண்டார் என்பது நமக்கு தெரியும்.
திருமணத்துக்கு பிறகு நஸ்ரியா சினிமாவில் நடிக்கவில்லை. வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருகிறார். சமீத்தில் அவரது கணவர் பகத் பாசில் அவருக்கு ஆசை ஆசையாக ரேஞ்ச் ரோவர் காரை வாங்கி பரிசளித்தார்.. காரை சும்மாவே நிறுத்தி வைத்திருந்தால் எப்படி என நினைத்த நஸ்ரியா தனது உறவினர்களை பார்த்து வருவதற்காக சில நாட்களுக்கு முன்னர் தானே காரை ஓட்டிக்கொண்டு நீண்டத்தூரம் சென்றுள்ளார்.
திரும்பி வரும்போது கொச்சினுக்கு நாற்பது கி.மீ தூரத்தில் உள்ள மூவாட்டுப்புழா என்கிற ஊருக்குள் வந்தபோது ட்ராபிக்கில் மெதுவாக சென்றார். அப்போது மற்றொரு கார், இவர் கார் மீது மோத, உடனே கோபத்தில் நடுரோடு என்று கூட பார்க்காமல் இறங்கி சண்டை போட ஆரம்பித்து விட்டார் நஸ்ரியா.
ஒரு சிலர் அவரை பார்க்கும் ஆவலில் கூட்டமாக வந்ததால் அங்கு கடும் நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனால் கடுப்பான வாகன ஓட்டிகள் ஒரு நடிகை நடுரோட்டில் இப்படி சண்டை போடலாமா என்று முணுகிகொண்டிருந்தனர். ஒரு வழியாக அங்கிருந்த போலீஸ்காரர்கள் நஸ்ரியாவை சமாதானம் செய்து அனுப்பி வைத்தபின் தான் நிலைமை சீரானது.

No comments:

Post a Comment