அஜித் தற்போது ‘வீரம்’ சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார் என்று அனைவருக்கும் தெரியும்..
அஜித்தின் 56-வது படமான இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க அவருக்கு தங்கையாக நடிகை லட்சுமி மேனன் நடித்து வருகிறார்.
ஏ.எம் ரத்னம் தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில்தொடங்கியது. முதற்கட்டமாக அஜித்-லட்சுமி மேனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. இதை தொடர்ந்து கொல்கத்தாவில் ஒரு சில காட்சிகள் எடுக்கப்படவுள்ளது.
தொடர்புடைய செய்திகள்: கலாய்த்த அஜித் ரசிகர்கள்… நிரூபித்த விஜய் ரசிகர்கள்..!
ஆனால், சமீபத்தில் வந்த தகவலின் படி திடீர் பயணமாக தல 56 படக்குழுவினர்கள் சீனா செல்வதாக கிசுகிசுக்கப்படுகின்றது. அங்கு பெரும்பாலும் சண்டைக்காட்சிகள் தான் எடுக்கப்படும் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்திற்கு இன்னும் பெயரிடாத நிலையில், தீபாவளிக்கு படம் வரும் என கூறப்பட்டுள்ளது. இப்படத்தில்அஜித் டாக்ஸி டிரைவராக நடிக்கிறார் என்றும், பாட்ஷா படத்தின் காப்பிதான் இப்படம் என்றும் கூறப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment