Friday, 5 June 2015

தமிழர்களை நிராகரித்த மோடி..!!


சமீபத்தில் இலங்கையில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, வடக்கு மாகாண தலைநகரான யாழ்ப்பாணத்துக்கு சென்றார். தமிழர்கள் அதிகம் வசிக்கும் இந்த யாழ்ப்பாணம் நகரம், விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் பெரிதும் பாதிக்கப்பட்டு சீர்குலைந்தது.
போருக்கு பின்னர் யாழ்ப்பாணம் சீரமைக்கப்பட்டு வருகிறது. இலங்கையின் வடக்கு மாகாணத்துக்கு இந்திய பிரதமர் ஒருவர் சென்றது இதுவே முதல் முறை ஆகும். இந்நிலையில் யாழ்ப்பாணம் சென்ற பிரதமர் மோடி, தமிழர்களுடன் கலந்துரையாடல் நடத்த மறுத்து விட்டதாக இந்திய ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.


மோடியின் இந்த பயணத்தின் போது, யாழ்ப்பாணம் செல்லும் நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டது. அப்போது போரின் பாதிப்பில் இருந்து இன்னமும் மீளாத யாழ்ப்பாணத்திலுள்ள தமிழர்களுடன் நரேந்திர மோடியைச் சந்திக்க நேரம் ஒதுக்கித் தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. எனினும் மோடி அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
யாழ்ப்பாணத்திற்கு மோடி விஜயம் செய்தமையானது ஒரு அடையாள நிகழ்வே. அவர் அதற்கு குறைந்த முக்கியத்துவம் கொடுக்கவே விரும்பினார் என இந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment