Friday, 5 June 2015

விபச்சார அழகி ‘ஜோதி லட்சுமி’ உங்களை அழைக்கிறாள்..?


‘காதல் அழிவதில்லை’ படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் சார்மி. அதன் பிறகு ‘ஆஹா எத்தனை அழகு’, ’லாடம்’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்தாலும் எந்தப்படமும் அவருக்கு வெற்றிபடமாக அமையவில்லை.
ஆனால் தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தார். தற்போது அங்கேயும் அவருக்கு பெரிய வாய்ப்புகள் இல்லை என்பதால் கடைத்திறப்பு விழாக்களில் கலந்துக்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் வாய்ப்புக்காக காத்திருந்த சார்மிக்கு அவரது நெருங்கிய நண்பரும், இயக்குநருமான புரி ஜெகநாத் கைகொடுத்தார். அவர் இயக்கும் ‘ஜோதிலட்சுமி‘ படத்தில் சார்மியை ஹீரோயினாக நடிக்க வைத்தார். இப்படத்தில் விபசார அழகியாக நடித்துள்ளார் சார்மி. இப்படத்தின் போஸ்டர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இது சார்மி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளதாம்.
தற்போது இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்தவுள்ளனர். இதற்கான அழைப்பிதழை மிக வித்தியாசமாக வடிவமைத்துள்ளனர். பெண்ணின் ஜாக்கெட்டை திறப்பது போல டிசைன் செய்திருக்கிறார்கள். இந்த புது டிசைன் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment