‘Made in India’ திட்டத்தின் மூலம் இந்தியாவிலேயே முழுக்க முழுக்க தயாரிக்கபட்ட ஜாக்குவார் கார் மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த வருடம் ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகமான ஜாக்குவார் XJ மாடல் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் சிறப்பு என்னவெனில் இந்த மாடலானது, ‘Made in India’ திட்டத்தின் மூலம் தயாரிக்கப்பட்டதாகும். முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மாடல் என்பதால், இதன் விலை இறக்குமதி செய்யப்பட்ட மாடலை விட சுமார் ரூ.24 லட்சங்கள் குறைவாக இருக்கிறது.
இந்த ஜாக்குவார் XJ மாடலானது, புனேயில் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் உள்ள ஜாக்குவார் பிரிவில் அசெம்பில் செய்யப்படுகிறது. இதன் மாடலும், ஜாக்குவார் என்கிற பிராண்ட் நேமுமே இதன் அமோக விற்பனைக்கு காரணம் என்றே கூறலாம். சொகுசுக் கார் பிரியர்களுக்கு ஜாக்குவார் முதல் தேர்வாக இருக்கும்.
தொடர்புடைய செய்திகள்: வாங்கக் கூடாத மோசமான 5 கார்கள்!!
ஜாகுவார் எக்ஸ்ஜே காரின் 3.0 லிட்டர் எஞ்சின் கொண்ட டீசல் மாடல் அசெம்பிள் செய்யப்படுகிறது. இந்த காரின் எஞ்சின் அதிகபட்சமாக 275 பிஎஸ் பவரையும், 600 என்எம் டார்க்கையும் வழங்கும். 8 விதமான வேகத்தில் காரை செலுத்துவதற்கான இசட்எஃப் தானியங்கி கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டு வேரியண்டுகளில் கிடைக்கும் இந்த ஜாக்குவார் XJ 2.0 லிட்டர் பெட்ரோல் போர்ட்ஃபோலியோ ரூ.97.22 லட்சம் என்ற விலையிலும், 3.0 லிட்டர் டீசல் பிரிமியம் ரூ.96.05 லட்சம் என்ற அளவிலும், 3.0 லிட்டர் டீசல் போர்ஃபோலியோ ரூ.1.03 கோடி என்ற அளவிலும் கிடைக்கிறது.
‘Made in India’ திட்டத்தால் இந்தியாவில் இந்த மாடலின் விலை 300 சதவீதம் அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment