R K நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் ஜெயலலிதா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளார். இதையொட்டி அவருக்கு உற்சாக வரவேற்பளிக்க அதிமுகவினர் பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
காலியாக உள்ள சென்னை R K நகர் தொகுதிக்கு வரும் 27-ந்தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் ஜெயலலிதா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்: RK நகரில் ஜெ.,க்கு எதிராக 5 சுயேட்சை போட்டியாளர்கள்!!?
தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் உள்ளிட்ட பிரதான எதிர்கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தாலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது வேட்பாளரை நிறுத்துகிறது.
தேசிய கட்சிகளான பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளும் ஓரிரு நாளில் தங்கள் முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளன. R K நகர் தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் கடந்த 3-ந்தேதி தொடங்கியது. இந்த நிலையில் இன்று அதிமுக வேட்பாளரான ஜெயலலிதா, தண்டையார்பேட்டையில் உள்ள சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் பிற்பகல் 2 மணிக்கு நேரில் மனுத்தாக்கல் செய்ய உள்ளார்.
ஜெயலலிதா வருகையையொட்டி, தண்டையார்பேட்டை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஏற்கனவே 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்: 20 தமிழர்கள் படுகொலை ஜெ., வாய்திறக்காதது ஏன்..??
No comments:
Post a Comment