Saturday, 30 May 2015

Maggi நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்த நடிகைக்கு நோட்டீஸ்!!?


Maggi நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்த நடிகை மாதுரி தீட்ஷித்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
பாலிவுட் நடிகை மாதுரி தீட்ஷித் தற்போது விளம்பர படங்களில் நடித்து வருகிறார். Maggi நூடுல்ஸ் விளம்பரம் ஒன்றிலும் அவர் நடித்துள்ளார். Maggi நூடுல்ஸை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது என்று அதில் அவர் கூறுவது போல விளம்பரம் அமைந்திருக்கும்.


இந்நிலையில், நூடுல்ஸில் Mono Sodium Glutamate என்ற ரசாயனம் அதிக அளவில் இருப்பது கண்டறியப்பட்டு, நூடுஸ்ல் பாக்கெட்டுகள் திரும்பப் பெறப்பட்டன.
இதனைத் தொடர்ந்து அந்த நூடுல்ஸ் சாப்பிடுவதால் என்ன நன்மை கிடைக்கின்றது என்று எங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி, உத்திரப்பிரதேச மாநில உணவு மற்றும் மருந்துத் துறை அதிகாரிகள் 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு நடிகை மாதுரி தீட்ஷித்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

No comments:

Post a Comment