2014ஆம் ஆண்டில் இந்தியாவின் சிறந்த வீரராக ரஹானே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2014ஆம் ஆண்டு சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கான சியெட் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்: ஐ.பி.எல் 8: 6வது முறையாக இறுதிப் போட்டிக்கு செல்லும் சென்னை அணி..!!
2014ஆம் ஆண்டின் சிறந்த சர்வதேச வீரராக இலங்கை வீரர் குமார் சங்ககாரா தேர்வு செய்யப்பட்டார். உள்ளூர் போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரராக வேகப்பந்து வீச்சாளர் வினய்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய ரஹானே இந்தியாவின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு முன்னாள் இந்திய அணி கேப்டன் சுனில் கவாஸ்கர் விருதை வழங்கினார். மேலும், ஒரு நாள் தொடரில் 264 ரன்கள் அடித்த ரோகித் ஷர்மாவுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்: ஐ.பி.எல் 8: 2வது தடவை மும்பை அணி சாம்பியன்…!!
No comments:
Post a Comment