Wednesday, 27 May 2015

ஷங்கரின் அடுத்தப்படம் இந்தியன் 2வா..? எந்திரன் 2வா..?


ஐ படத்தை அடுத்து இயக்குநர் ஷங்கர், ரஜினி நடிக்கும் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்து. இந்தப் படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக அமீர் கான், அல்லது ஷாருக்கான் நடிக்கலாம் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் இயக்குநர் ஷங்கர் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தை எடுப்பதற்கான முயற்சிகள் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கமல் இருவேடங்களில் நடிக்க, இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 1996-ஆம் ஆண்டு வெளிவந்த "இந்தியன்" படம் பெரும்வெற்றி பெற்றது. படத்தின் கதை, அதில் பொதிந்திருந்த சமூக கருத்துக்கள், பாடல், இசை, நடனம் என எல்லாத்துறைகளிலும், ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு குறைவில்லாமல், அப்படம் அமைந்திருந்தது என்றே கூறலாம்.
இந்நிலையில், இந்தியன் 2 படத்தை எடுப்பதற்கான முயற்சிகள் தற்போது நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏ.எம்.ரத்னம், இப்படத்தை தயாரிக்க உள்ளார். தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், ஷங்கருடன் சமீபத்தில் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் என கூறப்படுகிறது.
இயக்குநர் ஷங்கர், தற்போது எந்திரன் 2 எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே, இந்தியன் 2 படத்தின் திரைக்கதைப்பணிகளிலும் ஷங்கர் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். ஷங்கர் இயக்கத்தில், முதலில் வெளிவர இருப்பது இந்தியன் 2வா..? இல்லை எந்திரன் 2வா..? என்பதை தெரிந்துகொள்ள இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும்.....

No comments:

Post a Comment