தமிழ் சினிமாவில் தன்னுடன் நடிக்கும் நடிகைகளுக்கு பிரியாணி கொடுத்து மடக்குவதில் கெட்டிக்காரர் ஆர்யா.
அதுமட்டுமில்லாமல் எந்த கதாநாயகியையும் உங்களுக்கு யாரை பிடிக்கும் என்று கேட்டால் ஆர்யா என்று தான் சொல்வார்கள். அந்த அளவிற்கு எல்லோருடனும் நட்பாக பழகக்கூடியவர். இவர் எந்த நடிகைகளுடன் நடித்தாலும் அந்த நடிகையுடன் கிசுகிசுக்கப்படாமல் இருக்கமாட்டார்.
ஆர்யா யாரை காதலிக்கிறார் என்று கூகுளில் கேட்டால் அதற்கு கூட தலை சுற்றி விடும்.காரணம் அமலா பால், நயன்தாரா, அனுஷ்கா என்று அவருடைய காதலி பட்டியல்கள் நீண்டுக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில் நேற்று ஆர்யா கூறிய ஒரு தகவல் முதலில் அனைவருக்கும் அதிர்ச்சையை தந்தது. நேற்று டுவிட்டரில் ரசிகர் ஒருவர் ஆர்யாவிடம் ‘உங்களின் லவ்வர் யார் என்று கேட்டார். இதற்கு ஆர்யாஎன்னுடைய லவ்வர் விஷால் தான் என்று கூறினார். முதலில் அனைவரும் ஷாக் ஆக, பின் ஜாலி பாய் ஆர்யா எப்போதும் போல் அந்த ரசிகரையே கிண்டல் செய்துள்ளார்.
No comments:
Post a Comment