Thursday, 28 May 2015

மொபைல் கேட்ஜெட் மோகத்தால், பாலியல் தொழிலாளியான 13 வயது சிறுமி!!?


குஜராத்தில் 13 வயது சிறுமி ஒருவர் மொபைல்ஃபோன் கேட்ஜெட்டுகளுக்கு ஆசைப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
குஜராத் மாநிலம் வதோதரா பகுதியைச் சேர்ந்த மரக்கன்று விற்கும் பெண்ணின் 13 வயது மகள், ஆடம்பரமான கேட்ஜெட்டுகள் வாங்குவதற்காக கடந்த ஒருவருடமாக பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த சிறுமி கர்ப்பமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த விஷயம் தெரியவந்துள்ளது.


இவர் இதற்காக தனி செல்ஃபோன் ஒன்றையும் பயன்படுத்தி வந்துள்ளார். தனது அம்மா வீட்டில் இல்லாத நேரத்தில் இவர் இப்படி தொழில் செய்தது தெரியவந்துள்ளது. இவரது வீட்டில் சோதனை செய்த போது, விலையுயர்ந்த செல்ஃபோன் தொடர்பான, ப்ளூடூத் ஹெட்செட், ஸ்பீக்கர்ஸ் போன்ற பல கேட்ஜெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவர் சிறுமி என்பதால், இவருக்கு குழந்தைகள் நல அமைப்பு மூலம் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு அனுப்பி வைத்துள்ளனர். இவரது தந்தை இறந்து விட்டதால், தாயின் அரவணைப்பில் வாழும் இந்த சிறுமி, கேட்ஜெட் சாதனங்கள் வாங்குவதற்கு பணம் தேவைப்பட்டது. அதனால் தான் இப்படி செய்ததாக கூறியது கவுன்சிலிங் கொடுத்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



No comments:

Post a Comment