"கேண்டி க்ரஷ் சாகா (Candy Crush Saga)” மொபைல் போன், குறிப்பாக ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் , வைத்திருப்பவர்கள் அதிகம் விரும்பி விளையாடும் விளையாட்டு. ஆண்ட்ராய்ட், விண்டோஸ் மற்றும் ஐபோன்களில் கேண்டி க்ரஷ் சாகா விளையாடாத உலகளாவிய பயனாளர்களைக் காண்பது மிக அரிது.
மக்களிடையே புகழ் பெற்ற இந்த விளையாட்டை விளையாடித் தங்கள் நேரத்தையும் பணத்தையும் இழந்தவர்கள் பலர் உண்டு. கூடுதலாக விளையாட சான்ஸ் கேட்டு பணம் செலுத்தி விளையாடுபவர்களால் இந்த வருடம் முதல் மூன்று மாதங்களில் மட்டும், 56 கோடியே 95 லட்சம் டாலர் வருமானம் கிடைத்துள்ளது.
அப்படியே இதையும் படிங்க: விரைவில் ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தும் புதிய ஆப்ஷன்...!
இந்த கேம் தற்போது விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் தரப்பட இருப்பதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது http://news.xbox.com/2015/05/games-candy-crush-saga-is-coming-to-windows-10. நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் சேர்த்து இந்த விளையாட்டும் உங்கள் கம்ப்யூட்டரில் பதியப்படும். விண்டோஸ் சிஸ்டத்துடன் சாலிடெர், ஹார்ட்ஸ் மற்றும் மைன் ஸ்வீப்பர் விளையாட்டுகள் வரிசையில் தற்போது கேண்டி க்ரஷ் சாகாவும் சேர்ந்து கொள்கிறது.
இனி அலுவலகங்களில் வேலை பார்க்கும்போதே, மானேஜருக்குத் தெரியாமல் பலர் இந்த விளையாட்டை விளையாடுவதையும், தான் எத்தனை லெவல் தாண்டியிருக்கிறேன் என்று ஒருவருக்கொருவர் தகவல் பரிமாறிக் கொள்வதையும் பார்க்கலாம். சில அலுவலகங்களின் கம்ப்யூட்டர்களில், பேஸ்புக் போன்றதளங்கள் தடை செய்யப்பட்டிருக்கும். இப்போது, இந்த கேம் மைக்ரோசாப்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதால், அப்படிப்பட்ட தடை எதுவும் போட முடியாது.
இன்னொரு சிக்கலை எப்படி மைக்ரோசாப்ட் தீர்க்க போகிறது என்று தெரியவில்லை. விளையாடுகையில், பணம் செலுத்தும் முறை, நேரடியாக கிங் நிறுவனத்தின் பணம் செலுத்தும் வழிக்குச் செல்லுமா? அல்லது மைக்ரோசாப்ட் ஸ்டோர் வழியாகச் செல்லுமா? என்பது இனிமேல் தான் தெரிய வரும்.
No comments:
Post a Comment