நடந்து முடிந்த 8வது ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 2வது முறையாக சாம்பியன் பட்டத்தினை வென்றது. இந்த வெற்றி குறித்து அந்த அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய ஆலோசகருமான சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
8வது ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணி வெற்றி பெற்றது குறித்து சச்சின் டெண்டுல்கர் பேசுகையில், ’மும்பை அணி சிறப்பாக செயல்பட்டது. இது ஒட்டுமொத்த அணியின் கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றியாகும்.
தொடர்புடைய செய்திகள்: இந்திய அணியின் கோச் ஆகும் சச்சின் டெண்டுல்கர்!!
சிம்மென்ஸ் அனைத்து போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். ரோகித் சர்மா கேப்டனாக நல்ல முன்னேற்றம் கண்டுள்ளார். மும்பை அணி ஆரம்பத்தில் தொடர் தோல்விகளை சந்தித்தாலும், பின்பு எழுச்சி கண்டது.
ஒரு தொடரை எப்படி ஆரம்பிக்கின்றோம் என்பது முக்கியமல்ல. இறுதியில் எப்படி முடிக்கின்றோம் என்பது தான் முக்கியம்.’ என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த பேட்டியானது, ’சென்னை அணி ஆரம்பத்தில் தொடர் வெற்றிகளை பெற்றது, பின்பு ப்ளேஆஃப் மற்றும் இறுதிப்போட்டியில் சொதப்பியது’ என்பதை சச்சின் மறைமுகமாக குறிப்பிடுவது போல இருப்பதாக ஊடகங்கள் கிசுகிசுக்க ஏதுவாக அமைந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்: நாங்களும் ஆடுவோம்ல!! ஓய்வு பெற்ற வீரர்களுடன் களமிறங்கும் சச்சின், வார்னே!!
No comments:
Post a Comment