Tuesday, 26 May 2015

வந்தது +2 ரிசல்ட்.. லட்சுமி மேனன் பாஸா.. ஃபெய்லா..?


மலையாளத்தில் வெளிவந்த ‘ரகுவிண்டெ சுவந்தம் ரசியா’ என்ற திரைப்படம் மூலம் திரையுலகிற்கு வந்தவர் நடிகை லட்சுமி மேனன். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் ’சுந்தரபாண்டியன்’ படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். இந்தப் படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றிப் பெற்றது.
இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரபுசாலமன் இயக்கிய ‘கும்கி’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடத்தைப் பிடித்தார். அதற்கு பிறகு அவர் நடித்த அனைத்து படங்களும் மாபெரும் வெற்றிப் பெற்றதால் கோலிவுட்டின் ’லக்கி’ நடிகையாக வலம் வருகிறார்.
சசிகுமார்விக்ரம் பிரபு, விஷால், சித்தார்த், விமல் என தமிழ் சினிமாவின் முக்கிய ஹீரோக்களுடன் கை கோர்த்து நடித்து வரும் லட்சுமி மேனனுக்கு, 18 முடிந்து 19 வயது நடந்து கொண்டிருக்கிறது.
இரண்டு வருடங்களுக்கு முன்பு எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் வெற்றிகரமாக பாஸ் செய்த லட்சுமிமேனன், இப்போது +2விலும் பாஸ் செய்து விரைவில் கல்லூரிக்குச் செல்லவிருக்கிறார்.
நேற்று சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. அதில் லட்சுமிமேனனும் பாஸ் செய்திருக்கிறார். இதுகுறித்து தன் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில்... ‘‘இன்று இன்னொரு வெளியீடு. ஆனால் இது பர்சனல். ஆம்... +2 தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. என்னுடைய கடின உழைப்பிற்கு கடவுள் காட்டிய கருணையால் நான் +2வில் பாஸாகியிருக்கிறேன். என்னுடைய ஆசிரியர், குடும்ப உறுப்பினர்கள், என் நலம் விரும்பிகள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்!’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

No comments:

Post a Comment