வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா, ப்ரணிதா ஆகியோர் நடிப்பில் வருகிற 29-ந் தேதி வெளியாவிருக்கும் படம் ‘மாஸு என்கிற மாசிலாமணி’.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில், ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் வெளியிடும் இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 400 திரையரங்குகளில் வெளியாகிறது. சென்னையில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் படத்தை வெளியிடவுள்ளனர். இப்படத்திற்கு முதலில் ‘மாஸ்’ என்று தலைப்பு வைத்திருந்தனர்.
பேய் படமாக உருவாகியிருப்பதால் படத்திற்கு தணிக்கை குழுவினர் ‘யு/ஏ’ சான்றிதழ்தான் அளிப்பார்கள். அதனால் படத்திற்கு வரிவிலக்கு கிடைக்காது என்று படத்திற்கு ‘மாஸ்’ என்று ஆங்கிலத்தில் பெயர் வைத்திருந்தனர். ஆனால், தணிக்கை குழுவினர் சில காட்சிகளை கட் செய்துவிட்டு, படத்திற்கு ‘யு’ சான்றிதழ் அளித்துவிட்டனர்.
எனவே, படத்திற்கு வரிவிலக்கு பெற்றுவிடலாம் என்று ‘மாஸ்’ படத்திற்கு தமிழில் பெயர் வைக்க எண்ணினர். இதையடுத்து, படத்திற்கு ‘மாஸு என்கிற மாசிலாமணி’ என்று பெயர் வைத்தனர்.
இந்நிலையில், தற்போது ‘மாஸு’ என்பதை ‘மாசு’ என்று மாற்றி ‘மாசு என்கிற மாசிலாமணி’ என்று தலைப்பு வைத்துள்ளார்கள். இந்த புதிய தலைப்புடன் தற்போது போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. எனவே, ‘மாசு என்கிற மாசிலாமணி’ என்ற பெயருடனேயே சூர்யா படம் நாளை மறுநாள் வெளியாகவிருக்கிறது.
No comments:
Post a Comment