சமூகவலைத்தளங்களில் பரவும் ஜிகாதித் தீவிரவாதிகளின் பரப்புரைகளை ஒடுக்க பிரெஞ்சு அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. பேஸ்புக் மற்றும் டுவிட்டரின் பிரான்ஸ் நிர்வாகங்கள் இதற்காக களமிறங்கி உள்ளன.
இந்த முயற்சிக்கான சகல வசதிகளையும் பிரெஞ்சு அரசாங்கம் வழங்கி உள்ளது. cyberjihadisme எனப்படும் ஜிகாதிகளின் இணையவழித் தாக்குதல் மற்றும் பிரச்சாரங்களை முடக்குவதில் இந்த இணைய ஜாம்பவான்கள் களம் இறங்கியுள்ளனர். அத்தோடு இதற்கான எதிர்ப்பிரச்சாரங்களை வெளியிடுவதிலும்பிரெஞ்ச அரசாங்கம் இவர்களின் உதவிகளை நாடியுள்ளது.
அப்படியே இதையும் படிங்க: ஒரு புறம் பிக்கினி போஸ்!! மறு புறம் துப்பாக்கியுடன் மிரட்டல்??
கடந்த வருடம் மட்டும் 14 மில்லியன் வீடியோகளை யூடியூபில் இருந்து நீக்கியுள்ளதாக கூகுள் பிரான்சின் இயக்குநர் Benoît Tabaka தெரிவித்துள்ளார். "வெறுப்பு, மற்றும் வன்முறைப் பிரச்சாரங்களை எதிர்த்து நாங்கள் போராடி வருவதாகவும், எதிர்த்துப் போராடினால் மட்டும் போதாது. நல்ல கருத்துக்களையும் சாதகமான தகவல்களையும் தொடர்ந்து வெளியிட வேண்டிய கட்டாயம் உள்ளது" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பிரான்ஸ் அரசாங்கம், புதிதாகக் கொண்டுவந்துள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் மூலம் பல பயங்கரவாத இணையத்தளங்களை முடக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
அப்படியே இதையும் படிங்க: பிரான்ஸ் நடிகை ஜூலி கேயட்டின் நிர்வாணப்படம் வெளியிட்ட பத்திரிகை!
No comments:
Post a Comment