கமல் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ’உத்தமவில்லன்’ படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிப்பெறவில்லை. இதனால் விரைவில் வெளிவரவிருக்கும் பாபநாசம், விஸ்வரூபம் 2 ஆகிய படங்களை எதிர்நோக்கி காத்திருக்கிறார் கமல். இதற்கிடையில் தன்னுடைய உதவியாளர் ராஜேஷ் இயக்கும் ’தூங்கா வனம்’ படத்தில் நடிக்கவிருக்கிறார்.
இந்தப் படத்தில் முதன் முறையாக கமலுடன் ஜோடி போடுகிறார் நடிகை த்ரிஷா. ஏற்கனவே அவர் ’மன்மதன் அம்பு’ படத்தில் நடித்தாலும் கமலுக்கு ஜோடியாக நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் படப் பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் தொடங்கியுள்ளது.
நேற்று இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் கமல். பிறகு பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய அவர் ‘முதலில் த்ரிஷா இங்க வந்தவுடன் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரில் ஏன் நான் இல்லை என கோபமாக கேட்டார்.
இது பர்ஸ்ட் லுக் அதனால் தான் நீங்கள் இல்லை, அடுத்த போஸ்டர் வரும் போது நீங்கள் கண்டிப்பாக இடம்பெறுவீர்கள் என கூறி சமாதானப்படுத்தினேன்’ என கூறினார். இந்தப் படத்தில் மீண்டும் போலீஸ் அதிகாரியாக வருகிறார் என்றும் கூறுகிறார்கள். ஆனால் இது குறித்து இன்னும் அதிகாரபூரவமான தகவல்கள் வெளிவரவில்லை.
No comments:
Post a Comment