கணிணி மெதுவாக இயங்குவது அனைவருக்கும் அதிகமாக ஏற்படக் கூடிய இரு பிரச்சனை. அளவுக்கு அதிகமாக Software-களை பயன்படுத்தும் போது இந்த சிக்கல்களை அதிகமாக நாம் சந்திக்கின்றோம்.
இதற்கு நம் சிஸ்டத்திலுள்ள RAM தான் காரணம். இதனை மேம்படுத்த(Upgrade) வேண்டுமெனில் அதிகமாக செலவிட வேண்டியிருக்கும், இது அனைவருக்கும் இயலாத காரணம். கவலை வேண்டாம் மிக சுலபமான வழிமுறை ஒன்று இருக்கின்றது. உங்களிடம் Pendrive இருந்தாலே போதும்.
இந்த வழிமுறை அனைத்து விண்டோஸ் சிஸ்டம்களுக்கும் பொருந்தும். உங்களின் Computer-ஐ வேகமாக்க உங்களிடம் குறைந்தது ஒரு 1GB Pendrive இருந்தாலே போதும்(4GB இன்னும் சிறப்பு).
அப்படியே இதையும் படிங்க: உங்க கம்ப்யூட்டர் Slow-வா இருக்கா?? இதெல்லாம் செஞ்சு பாருங்க!!!
கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றவும்…
1. Pendrive-ஐ கணிணியில் பொருத்தவும்.
2. உங்கள் கணிணி Pendrive-ஐ கண்டறியும் வரை காத்திருக்கவும்.
3. பின்னர் My Computer ஐகானை Right கிளிக் செய்யது Properties-ஐ தேர்வு செய்யவும்.
4. அதில் Advanced System Settings-ஐ கிளிக் செய்யவும்.
5. அதில் உள்ள Advanced Tag-ல் Performance Settings-ஐ கிளிக் செய்யவும்.
6. பின் Advanced–> Change கிளிக் செய்யவும்.
7. அதில் Pendrive தேர்வு செய்து Custom Size என்பதை கிளிக் செய்யவும்.
8. அந்த திரையில் தோன்றும் value of space available-ல் பார்க்கவும்.
9. அதே மதிப்பினை Initial மற்றும் Maximum Size என்ற பாக்ஸில் Type செய்யவும்.
10. தற்போது உங்கள் சிஸ்டத்தினை Restart செய்யவும்.
இப்போது உங்கள் சிஸ்டத்தின் வேகம் மாறுபடுவதை நீங்களே காணலாம். இது நீங்கள் பயன்படுத்தும் Pendrive-ன் Size-ஐப் பொறுத்து இன்னும் அதிகப்படுத்த இயலும்.
அப்படியே இதையும் படிங்க: வைரஸ் பாதிக்கப் பட்ட Fileகளை திரும்பப் பெறுவது எப்படி??
No comments:
Post a Comment