Monday, 25 May 2015

1.5 மில்லியன் குடியேறிகளை புறக்கணித்த டேவிட் கேமரூன்??


இங்கிலாந்து தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருப்பது தொடர்பாக நெருக்கடிகள் அதிகரித்துள்ளன. இது தொடர்பாக, இங்கிலாந்து மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது.
2017ம் வருடம் வசந்தகாலமான மார்சு அலல்து ஏப்ரல் மாதம் இந்த பொது வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. வரும் மே 27ம் தேதி, இங்கிலாந்து மகாராணியின் சிறப்புரை நடக்க இருக்கிறது.
இந்த உரையில், ஐரோப்பிய வாக்கெடுப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நீடிக்குமா என்று முடிவு செய்ய விருக்கும் இந்த வாக்கெடுப்பில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களே வாக்களிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்படியே இதையும் படிங்க: இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் ரத்தத்தில் இந்திய மரபணு- ஆய்வில் தகவல்

இங்கிலாந்தில் வாழும் சுமார் 15 லட்சம் ஐரோப்பிய குடியேறிகள் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. மேலும், பெரும்பாலான ஐரோப்பிய குடியேறிகளை இந்த தேர்தலில், பங்கேற்க விடாமல் தடைவிதிக்க இருக்கிறதாம் டேவிட் கேமரூன் அரசாங்கம். இதனடிப்படையில் சுமார் 15 லட்சம் பிரிட்டன் வாழ் ஐரோப்பிய குடியேறிகள் 2017ம் ஆண்டு நடக்க இருக்கும் ஐரோப்பிய ஒன்றிய பொது வாக்கெடுப்பில் கலந்து கொள்ள முடியாது என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இதற்கு முன் நடந்த ஸ்காட்லாந்து பிரிவினை தேர்தலில், ஐரோப்பிய குடியேறிகள் மற்றும் 16 வயதினர் இருவருமே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரிட்டன் இணைந்திருப்பதை எதிர்ப்பவர்களுக்கு இந்த புதிய விதிகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளன.
ஐரோப்பிய ஒன்றிய எதிர்பார்களரும், பீட்டர்பர்க் எம்.பி.யுமான ஸ்டீவர்ட் ஜாக்ஸன் கூறுகையில், ஐரோப்பிய ஒன்றிய பொதுத் வாக்கெடுப்பில் ஐரோப்பிய பிரஜைகள் பங்கெடுப்பது முற்றிலும் தவறான விஷயம் என்று குறிப்பிட்டுள்ளார். “இந்த வாக்கெடுப்பு பிரிட்டனின் எதிர்காலத்தை சார்ந்தது, இதில் பிரிட்டன் பிரஜைகள் தான் கலந்து கொள்ள வேண்டும்.
ஐரோப்பிய பிரஜைகள் பிரிட்டன் தேர்தல்களில் அனுமதிக்கப்படுவதில்லை. இதே போல், பொது வாக்கெடுப்புகளிலும், பங்கேற்க அனுமதிக்கப்படுவதில்லை.” என்று ஸ்டீவர்ட் கூறினார்.

No comments:

Post a Comment