பிரான்ஸில் உள்ள கேன்ஸ் நகரில் ஆண்டு தோறும் கேன்ஸ் திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 68-வது கேன்ஸ் திரைப்பட விழா கடந்த மே 13ஆம் தொடங்கி நேற்று (மே 24) வரை நடைப்பெற்றது. இதில் பல்வேறு நாடுகளிலிருந்து பல்வேறு திரைக் கலைஞர்கள் பங்கேற்றார்கள்.
இந்த விருது விழாவில் இந்திய திரைப்படமான ‘மாஸான்’ என்ற இந்தி படம் விமர்சர்கள் விருது பெற்றுள்ளது. 68-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது வாங்கிய ஒரே இந்திய படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. இத்திரைபடம் கடந்த 19-ம் தேதி காண்பிக்கப்பட்டது.
பார்வையாளர்களின் பலத்த கைத்தட்டல்களுகிடையே , விமர்சன விருதினை வென்றுள்ளது இப்படம். நீரஜ் கெய்வான் இயக்கியுள்ள இந்த படத்தில் விக்கிகவுசால், ரிச்சா சந்தான், ஸ்வேதா திரிபாதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
தனது முதல் படத்திற்கு உலகளவில் அங்கீகாரம் கிடைத்தது குறித்து நீரஜ் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார். நான்கு சிறிய நகரங்களுக்கு இடையேயான பயணத்தை கதைக்களமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment