கடந்த வாரம் டிமாண்டி காலனி, விந்தை, கமரகட்டு, நண்பர்கள் நற்பணி மன்றம், திறந்திடு தீசே ஆகிய படங்கள் ரிலீஸாகின. இதில் அருள்நிதி நடித்த ‘டிமாண்டி காலனி’ படம் மட்டுமே ஓரளவுக்கு நல்ல வசூலை குவித்து பாக்ஸ் ஆபிஸில் இடம் பிடித்துள்ளது. மற்ற படங்கள் பாக்ஸ் ஆபிஸில் இடம் பிடிக்கவில்லை.
தற்போது இந்த வார சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல்நிலவரங்கள் மட்டும் வெளிவந்துள்ளது. இதில் 2 வாரத்தில் 36 வயதினிலே படம் ரூ 1.56 கோடியும், புறம்போக்கு படம் ரூ 1.40 கோடியும் வசூல் செய்துள்ளது. புது வரவான டிமான்டி காலனி ரூ 64 லட்சம் வசூல் செய்துள்ளது என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
மேலும் ஓகே காதல் கண்மணி, உத்தம வில்லன், காஞ்சனா 2 ஆகிய படங்களும் பாக்ஸ் ஆபிஸில் இடம் பிடித்திருக்கின்றன. ஓ காதல் கண்மணி 6 வாரத்தில் 2.76 கோடியும், உத்தம வில்லன் 4 வாரத்தில் 3.06 கோடியும், காஞ்சனா 2 படம் 6 வாரத்தில் 6.23 கோடியும் வசூல் செய்துள்ளது.
No comments:
Post a Comment