உலகிற்கு அச்சுறுத்தல் கொடுத்து வரும் ஐ.எஸ்.ஐ.எஸ்., தீவிரவாத அமைப்பிடம் தாம் தோற்கவில்லை என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
ஈராக் மற்றும் சிரியாவில் நிலை கொண்டுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ்., தீவிரவாதிகள், கடந்த வாரம், ரமாதி மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க நகரமான பாமைரா இரண்டையும், பிடித்தனர்.
ஒரே வாரத்தில் இரண்டு முக்கிய இடங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ். தம் கட்டுப் பாட்டின் கீழ் கொண்டுவந்தது, அமெரிக்காவுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்காவின் ’தி அட்லாண்டிக்’ இதழுக்கு பேட்டி இது குறித்து பேட்டி அளித்துள்ளார் ஒபாமா. இந்த பேட்டியில், உலகை அச்சுறுத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ்., தீவிரவாத அமைப்பு ரமாதியை கைப்பற்றியது பெரும் பின்னடைவாகக் கருதப்பட்டாலும், அமெரிக்கா ஐ.எஸ்.ஐ.எஸ் இடம் தோற்கவில்லை என்று ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:
இராக்கில் ரமாதியை ஐஎஸ் அமைப்பினர் கைப்பற்றியுள்ளனர். இது எங்களுக்கு உத்திப்பூர்வமான பின்னடைவுதான். இதற்குக் காரணம் இராக் ராணுவத்தின ருக்கு முறையான பயிற்சி இல்லா ததுதான். மேலும் ஐஎஸ் அமைப்பை எதிர்த்துப் போரிடுவதில் அந் நாட்டில் உள்ள சன்னி பிரிவு மக்கள் அதிகளவில் ஈடுபாடு காட்டு வதில்லை.
எங்களின் பின்னடை வுகளுக்கு இதுவும் ஒரு காரணம். ராணுவத்தினருக்குப் பயிற்சி அளிப்பதோடு, சன்னி பிரிவு மக்க ளையும் ஐஎஸ் அமைப்புக்கு எதிரான போரில் அதிகளவு ஈடுபடுத்த உள்ளோம். எனவே, எங்களின் போராட்டம் தோல்வி யடையவில்லை. தொடக்கத்தில் இராக்கில் உள்ள ஷியா பிரிவினருக்கு ஈரான் ஆதரவு அளித்து வந்ததைக் கண்டு நாங்கள் கவலையடைந்தோம்.
ஆனால் ஈரானுடன் அமெரிக்கா அணு ஆயுத ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டால் அந்தப் பிராந்தியத்தில் ஈரானின் கை ஓங்கும் என்று சவுதி அரேபியாவும் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளும் சந்தேகப்படன.

No comments:
Post a Comment