Saturday, 23 May 2015

உனக்கு கொடுக்கிற காசுக்கு இன்னும் இரண்டு ஹீரோயினை நடிக்க வைக்கலாம்..!


முன்னணி நடிகர் முதல் வளர்ந்து வரும் நடிகர் வரை அனைத்து நடிகரும் நடிக்க விரும்பு நடிகை யார் என்றால் அது நயன்தாரா தான்.
தமிழ் சினிமாவில் இவருக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு கிராக்கி என்று தெரியவில்லை. காதல் தோல்விக்கு பிறகு தான் இப்படி ஒரு விஸ்வரூபம் எடுத்துள்ளார் நயன்தாரா. தற்போது அரை டஜன் படங்களுக்கு மேல் நடித்து வரும் அவர் ஒரு படத்தில் நடிக்க 3 கோடி சம்பளம் கேட்டு தயாரிப்பாளரை கதற விட்டிருக்கிறார்.
மிக நீண்ட நாட்கள் கழித்து நடிகர் சிரஞ்சீவி நடிக்க இருக்கும் புதிய படத்தை பிரபல இயக்குநர் பூரி ஜெகநாத் இயக்க அவரது அன்பு மகன் ராம் சரண் தேஜா படத்தை தயாரிக்கிறார். சிரஞ்சீவியின் 150வது படம் என்பதால் அவரது ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் அவருக்கு ஜோடியாக ஒரு முன்னணி நடிகை நடித்தால் நன்றாக இருக்கும் என்று கருதி நடிக்க நடிகை நயன்தாராவை அணுகியுள்ளனர். ஆனால் நயன்தாரா 3 கோடி தந்தால் நடிக்கிறேன் என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ந்து போன படக்குழு தற்போது பயந்து பின்வாங்கி அந்த பணத்தில் இரண்டு பெரிய ஹீரோயின்களை நடிக்க வைக்கலாம் என்று முடிவெடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment