Saturday, 23 May 2015

பாலிவுட் ரசிகர்களைக் கவர்ந்த தென்னிந்திய பிரபலங்கள் யார் யார்… தெரியுமா??


தமிழ், தெலுங்கு படங்களை இந்தியில் எடுப்பதும், இந்தி படங்களை தமிழ், தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்வதும் வழக்கமான ஒன்றுதான். ஆனால் சமீப காலமாக தென்னிந்திய சினிமாக்களை அதிகமாகவே பாலிவுட்டில் ரீமேக் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
சமீபத்தில் கஜினி, போக்கிரி, காவலன், தில்லாலங்கடி, சிங்கம், சிங்கம்2, துப்பாக்கி, கில்லி என பல படங்கள் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றது. காரணம் இப்படங்களுக்கு பாலிவுட் ரசிகர்களிடம் உள்ள வரவேற்புதானாம். தமிழ், தெலுங்கு நடிகர்களுக்கு இப்போது பாலிவுட்டிலும் ரசிகர்கள் உள்ளனராம். வார இறுதியில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தென்னிந்திய நடிகர்களின் டப்பிங் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கின்றதாம்.
எனினும் முன்பெல்லாம் அவ்வளவாக தென்னிந்திய நடிகர்களை அடையாளம் தெரியாது. ரஜினி, கமல், சிரஞ்சீவி போன்ற முந்தைய தலைமுறை நடிகர்கள் பாலிவுட்டில் பிரபலமாகவே இருந்து வந்தனர். ஆனால் இன்றைய தலைமுறை நடிகர்களிலும் சிலர் பாலிவுட் ரசிகர்களிடையே பிரபலமாகி வருகின்றனர். அப்படி பாலிவுட்டில் பிரபலமாகும் நடிகர்களைக் காணலாம்.
விஜய்:
விஜய், அவரது ரசிகர்களால் இளையதளபதி என அழைக்கப்படுகிறார். தமிழகத்தில் மாபெரும் ரசிகர் பட்டாளம் உள்ள ஒர் நடிகர் என்றே கூறலாம். இவரது படங்கள் ஏராளமான சாதனைகளை படைத்துள்ளன. உலக அளவில் இவரது படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. இவரது பிளாக் பஸ்டர் படங்கள் என பலவற்றைக் கூறலாம்.
உதாரணமாக, கத்தி ( உலகளவில் 100 கோடிகள்), துப்பாக்கி(இந்திய அளவில் 100 கோடிகள் உலகளவில் 175 கோடிகள்) மேலும் இப்படம் பாலிவுட்டில் ஹாலிடே என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. வேட்டைக்காரன், திருப்பாச்சி, கில்லி, போக்கிரி (சல்மான் நடிக்க வாண்டட் என்ற பெயரில் ரீமேக் ஆனது) என பல படங்கள் பாலிவுட் ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. ஆனால் இதுவரை நேரடி பாலிவுட் படங்களில் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், அக்‌ஷய் குமாரின் ரவுடி ரத்தோர் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு கெஸ்ட் ரோலில் நடித்தார். இப்படத்தின் இயக்குனர் பிரபுதேவா என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யா:
சூர்யாவும் தமிழில் முன்னனியில் உள்ள ஒரு நடிகர். பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார். மேலும் ராம் கோபால் வர்மாவின் பாலிவுட் படமான ரத்த சரித்திரம் 2-ல் நடித்துள்ளார். சூர்யாவின் மிகப் பிரபலமான படங்கள் வரிசையில் ’காக்க காக்க’ படமானது இந்தியில் ஃபோர்ஸ் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
மேலும், மாபெரும் வெற்றிப்படமாக அமைந்த கஜினி பாலிவுட்டில் அதே பெயரில் அமீர்கான் நடிப்பில் உருவாகி பாலிவுட்டை கலக்கியது. சிங்கம் வரிசைப் படங்களும் அதே பெயரில் பாலிவுட்டில் உருவாகியது. அது மட்டுமின்றி இவரின் அயன், பிதாமகன், பேரழகன் மற்றும் 7ஆம் அறிவு போன்ற படங்கள் இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டன.
விக்ரம்:
விக்ரம் தென்னிந்திய சினிமாவில் மிக பிரபலமான மற்றொரு நடிகர். இவரின் அபரிமிதமான நடிப்பாலும், சினிமாவிற்கு இவர் தன்னை அர்பணித்த விதத்தாலுமே இவருக்கு ரசிகர்கள் ஏராளம் என்றே கூறலாம். இவரை தென்னிந்தியாவின் அமீர்கான் என்று கூறினாலும் மிகையாகாது. மேலும், இவர் நேரடி பாலிவுட் படங்களான ராவண் மற்றும் டேவிட் போன்ற படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இவரின் சேது பாலிவுட்டில் சல்மான் நடிக்க ’தேரே நாம்’ பெயரில் வெளியானது. மேலும், தில், சாமி போன்ற படங்களும் ரீமேக் செய்யப் பட்டுள்ளன. அந்நியன், தாண்டவம் படங்கள் டப் செய்து வெளியிடப்பட்டுள்ளன.
தனுஷ்:
இவரை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. ரஜினிகாந்த் மருமகன் என்பது ஒரு பக்கமிருக்க, இவரின் கொலவெறி பாடல் மூலம் உலகளவில் பேசப்பட்டார். தமிழில் விஜய்க்கு அடுத்தபடியாக நன்றாக நடனமாடக் கூடிய நடிகர் என்றும் கூறப்படுகின்றார். இவரின் நேரடி படமான ’ராஞ்சனா’ மூலம் பாலிவுட் ரசிகர்களை வெகுவாக் கவர்ந்தார்.
தமிழில் இவரின் வெற்றிப்படங்களாக அறியப்படுவன, காதல் கொண்டேன், திருடா திருடி, திருவிளையாடல் ஆரம்பம், யாரடி நீ மோகினி, ஆடுகளம், பொல்லாதவன் போன்வையும் அடக்கம்.
மகேஷ் பாபு:
மகேஷ் பாபு, தெலுங்கு திரையுலகில் மாபெரும் ரசிகர்கள் கொண்ட நடிகராக அறியப் படுபவர். இவரின் பல படங்கள் இந்தியில் டப் செய்து திரையிடப்பட்டுள்ளன. இவரின் சினிமா வாழ்வில் திருப்புமுனையாக அமைந்த ஒக்கடு பாலிவுட்டில் திவார் என ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இவரின் தூக்குடு திரைப்படம் உலகளவில் 100 கோடிகள் வசூலை அள்ளியது.
இவரின் வெற்றிப்படங்கள் பட்டியலில், நேனோக்கனிடே, ஆகடு, பிஸ்சினஸ்மேன் போன்றவை அடங்கும். இவரும் நேரடி பாலிவுட் படம் ஒன்றில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராம் சரண் தேஜா:
தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவியின் புதல்வரான இவர். சினிமாவிற்கு வந்த குறுகிய காலத்திலேயே பிரபலமாகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் ஜான்ஜீர் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.
இவரின் மகதீரா படம் மூலம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டார். இப்படம் பாலிவுட்டில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இப்படத்தின் வசூல் சாதனை கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக முறியடிக்கப்படாத சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment