முன்னாள் ஜிம்னாஸ்டிக் வீராங்கைனையான 32 வயதான அலினா கபயேவாவுக்கும், 61 வயதான ரஷிய அதிபர் புதினுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக ரஷ்யாவில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ரஷியாவில் உள்ள மாஸ்கோவில் நடைபெற்ற ஜிம்னாஸ்டிக் விழாவில் கலந்து கொண்ட அலினா கர்ப்பமாக இருப்பவர்கள் போடும் ஆடையை அணிந்து வந்ததால் அவர் கர்ப்பமாக இருக்கலாம் என்று பரவலாக பேசப்படுகிறது.
இதற்கு முன்னதாக ரஷிய அதிபர் புதினுக்கும் அவரது காதலியான ஒலிம்பிக் போட்டியில் ஜிம்னாஸ்டிக் பிரிவில் தங்கபதக்கம் வென்றவருமான அலினா கபயேவாவுக்கும் சுவிட்சர்லாந்தில் குழந்தை பிறந்துஇருப்பதாக வதந்திகள் பரவின. விளாடிமிர் புதின் மூலம் ஒரு குழந்தை பிறந்தது பற்றிய தகவல், உண்மையில்லை. சிலர் இத்தகைய வதந்திகளை திட்டமிட்டு பரப்புகின்றனர், என அவரது செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெசகோவ் மறுப்பு தெரிவித்திருந்தார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 30 வருடமாக இருந்த மனைவியை 2013 ம் ஆண்டு விவாகரத்து செய்திருந்தார். இதற்கு காரணம் முன்னாள் ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை அலினா கபயேவாதான் என்று பேசப்பட்டது இதனை புதின் அப்போது மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment