கர்நாடக தனி நீதிமன்றத்தில் நடந்து வந்த, ஜெயலலிதா சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் கடந்த மே 11ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த தீர்ப்பில், ஜெயலலிதாவை விடுதலை செய்து நீதிமன்றம் தீர்பளித்தது, பொதுமக்களையும், இந்திய அரசியல் கட்சியினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அ.தி.மு.க.,வின் தற்காலிக முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, கடந்த மே 23ம் தேதி ஜெயலலிதா இழந்த முதல்வர் பதவியை மீண்டும் ஏற்றுக் கொண்டார்.
ஜெயலலிதாவை கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதலை செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம் என்று, வழக்கில் அரசு தரப்பில் வாதாடிய மூத்த வக்கீல் ஆச்சார்யா தெரிவித்தார்.
இருந்தாலும், மேல் முறையீடு செய்வது குறித்து இன்னும் ஆலோசனை செய்து வருவதாக கர்நாடக அரசு தெரிவித்து வருகிறது. அதே போல், வழக்கின் மனுதாரரான சுப்பிரமணியன் சாமியும் மேல் முறையீடு செய்ய கால தாமதம் நடத்தி வருவதாகத் தெரிகிறது. இந்நிலையில், இவ்விருவரும் ஜெய்லலிதா சொத்து குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்ய வில்லை என்றால், தி.மு.க., சார்பில் உறுதியாக மேல்முறையீடு செய்யப்படும் என்று மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்றம் 11-5-2015 அன்று வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று இந்த வழக்கின் அரசு சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா, கர்நாடகா அரசின் தலைமை வழக்கறிஞர் ரவி வர்மக் குமார் ஆகியோர் கர்நாடகா அரசுக்கு தெளிவாகப் பரிந்துரை செய்துள்ளார்கள்.
குறிப்பாக ஆச்சார்யா, இந்த வழக்கில் கர்நாடகா மாநில அரசு மேல்முறையீடு செய்யாவிட்டால் அது தவறான சட்ட முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்றே அந்த அரசுக்கு ஆணித்தரமாகக் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளும், முக்கியமான ஊடகங்களும், சட்டவல்லுநர்களும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்கள். கர்நாடகா மாநில அரசின் தலைமை வழக்கறிஞரும் இந்த வழக்கின் சிறப்பு வழக்கறிஞரும் பரிந்துரை செய்துள்ள நிலையில் அவர்களின் பரிந்துரையை ஏற்று, கர்நாடகா மாநில அரசு உச்சநீதிமன்றத்திலே மேல்முறையீடு செய்யும் என்று நாம் உறுதியாக நம்புகிறோம்.
தொடக்கத்தில் இந்த வழக்கினைத் தொடுத்த சுப்பிரமணியன் சுவாமியும் இந்த வழக்கில் தானே மேல்முறையீடு செய்யப் போவதாகவும் அறிவித்திருக்கிறார். இந்த வழக்கினில் பங்கேற்க திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு உரிமை என இரண்டு முறை உச்சநீதிமன்றத்தால் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஜெயலலிதா மீதான இந்த சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும் மேல்முறையீடு செய்யும் என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இது குறித்து ஒரு டுவீட்டும் பதிவித்துள்ளார், தி.மு.க., தலைவர் கருணாநிதி.
டுவீட் கீழே:
No comments:
Post a Comment