Saturday, 23 May 2015

அட்வைஸ் செய்த ரஜினி.. ராஜினாமா செய்த செளந்தர்யா..?


'கோச்சடையான்' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா.
முதல் படத்திலே தன்னை திரையுலகில் முத்திரை பதித்துக்கொண்ட இவர் கோச்சடையான் படத்தை தயாரித்த ஈராஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வருகிறார். புதிய படங்களின் உரிமம் வாங்குவது உள்ளிட்ட ஈராஸ் நிறுவனத்தின் அனைத்து முக்கிய நிர்வாகப் பொறுப்புகளையும் கவனித்து வருகிறார்.
சமீபத்தில் செளந்தர்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததைத் தொடர்ந்து ரஜினிகாந்த், "குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் முக்கியம். குழந்தை நன்றாக வளர்ந்தவுடன், வேலை உள்ளிட்ட விஷயங்களைத் தீர்மானித்துக் கொள்" என்று செளந்தர்யாவுக்கு ஆலோசனை தெரிவித்திருக்கிறார்.
அப்பாவின் ஆலோசனையைத் தொடர்ந்து, ஈராஸ் நிறுவனத்தின் தென்னிந்திய தலைவர் பதவியை செளந்தர்யா ராஜினாமா செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. செளந்தர்யாவின் ராஜினாகாந்தை தொடர்ந்து, அப்பதவிக்கு வரும் புதிய தலைவர் யார் என்பது உள்ளிட்ட தகவல்கள் சில தினங்களில் வெளியாக இருக்கிறது.

No comments:

Post a Comment