விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'இது என்ன மாயம்' படப்பிடிப்பை சமீபத்தில் முடித்துள்ள ஏ.எல்.விஜய், தற்போது அந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகளை மும்முரமாக கவனித்து வருகிறார்.
கூடிய விரைவில் இப்படம் ரிலீஸாக இருக்கும் நிலையில் அடுத்ததாக பிரபுதேவா நடிக்ககும் புதிய படத்தை இயக்கவுள்ளாராம் விஜய். கடந்த சில வருடங்களாக பாலிவுட்டில் பிசியாக இருந்த பிரபுதேவா நீண்ட இடைவேளைக்கு பின்னர் மீண்டும் கோலிவுட்டில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த புதிய படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக விஜய்யின் மனைவி அமலாபாலே நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ’தெய்வத்திருமகள்’, ‘தலைவா’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் அமலாபால்.
ஏ.எல்.விஜய்-பிரபுதேவா மற்றும் பிரபுதேவா-அமலாபால் இணையும் முதல் திரைப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment