Sunday, 24 May 2015

ஐ.பி.எல் 8: 2வது தடவை மும்பை அணி சாம்பியன்…!!


ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் மும்பை அணி சென்னை அணியை 41 ரன்களால் வீழ்த்தி 2வது தடவையாக ஐ.பி.எல் கோப்பையை வெற்றிவாகை சூடிக் கொண்டது மும்பை அணி நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் இறுதி ஆட்டமானது கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது, போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி முதலில் களமிறங்கிய மும்பை அணியின் ஆரம்பத் ஆட்டக்காரரான லெண்டில் சிம்மன்சும் பார்த்தீவ் பட்டேலும் ஆடினர்..
இதில் பார்த்தீவ் பட்டேல் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய அணித்தலைவர் ரோஹித் சர்மாவும் சிம்மேன்சும் அற்புதமாக ஆடி சென்னை அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர் கொண்டனர். இந்த வேளையில் அணித்தலைவர் ரோஹித் சர்மா அரைச்சதம் அடித்தார் இவர் (50) ரன்களில் (6பவுண்டரி, 2சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழந்ததை தொடர்ந்து இன்னும்மொரு ஆரம்பத் ஆட்டக்காரரான சிம்மோன்ஸ் தன்னுடைய பங்கிற்கு அரைச்சதம் தாண்டி (68) ரன்களில் (8பவுண்டரி, 3சிக்ஸர்) என எடுத்து ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் களமிறங்கிய மும்பை அணியின் அதிரடி ஆட்டக்காரரான பொல்லார்ட்டும் அவருடன் களமிறங்கிய அம்பத்தி ராயுடும் ஜோடி சேர்ந்து சென்னை அணியின் பந்துவீச்சாளர்களை பதம் பார்த்தனர் இதில் மிக அதிரடியாக ஆடிய பொல்லார்ட் தன்னுடைய அணிக்காக (36) ரன்கள் (2பவுண்டரி, 3சிக்ஸர்) என அடித்து ஆட்டமிழந்தார் ஆட்டநேர முடிவில் மும்பை அணி 20 ஒவர்களில் 5விக்கட்டை இழந்து 202 என்ற கடின ரன் இலக்கை எடுத்தது.
இந்த சூழ்நிலையில் மும்பை அணிக்காக அம்பத்தி ராயுடு ஆட்டமிழக்காமல் (36) ரன்கள் (3 சிக்ஸர்) என அடித்து இறுதிவரை களத்தில் இருந்தார். சென்னை அணியின் பந்துவீச்சில் சார்பில் பிராவோ 2விக்கட்டுக்களை வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து 203 என்ற கடின இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் ஆரமபத் ஆட்டக்காரரான டுவைன் ஸ்மித்தும் மைக் ஹசியும் ஆடவந்தனர். இதில் சென்ற போட்டியில் சிறப்பாக ஆடிய மைக் ஹசி இந்தப் போட்டியில் (4) ரன்களை மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் களமிறங்கிய ரெய்னாவும் டுவைன் ஸ்மித்தும் மிக நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்த நிலையில் மிகச் சிறப்பாக ஆடிய ஸ்மித் அரைச்சதம் தாண்டி (57) ரன்களில் (9பவுண்டரி, 1சிக்ஸர்) என எடுத்து ஆட்டமிழந்தார். இதேவேளையில் மிக பொறுமையாக விளையாடி வந்த ரெய்னா (28) ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்கள் குறைவான ரன்களில் ஆட்டமிழந்ததால் சென்னை அணி 20 ஒவர்களில் 8விக்கட்டை இழந்து 161 ரன்களை மட்டுமே அவர்களால் எடுக்க முடிந்தது.
இதனால் அந்த அணி 41 ரன்களால் மாபெரும் தோல்வியை சந்திக்க வேண்டியதாக இருந்தது. இந்த வெற்றியை தொடர்ந்து மும்பை அணி 2 வது முறையாக ஐ.பிஎல் சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது மும்பை அணியின் பந்துவீச்சு சார்பில் மக்கலேகன் 3விக்கட்டுக்களையும், மாலிங்கா, ஹர்பஜன் சிங் ஆகியோர் தலா 2விக்கட்டுக்களையும் வினய் குமார் 1விக்கட்டையும் கைப்பற்றினர். நேற்றைய இறுதி ஆட்டத்தில் ஆட்டநாயகனாக அணித்தலைவர் ரோஹித் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.

No comments:

Post a Comment