வருடத்திற்கு ஒரு முறை ஆந்திரா, கேரளா, கர்நாடகா என்று வெவ்வேறு மாநிலங்களில் இருந்து கூடை கூடையாக இறங்கும் தக்காளியை போன்று பல ஹீரோயின்கள் வந்து தமிழ் சினிமாவில் இறங்குவதால் பல நடிகைகளின் வாழ்க்கை கேள்விகுறியாகிவிடுகிறது.
ஒரு சில முன்னணி நடிகைகளின் மார்க்கெட் சரிந்து, சினிமாவில் இருந்து ஓரங்கட்டப்படுகிறார்கள். இதனால் சினிமா வாழ்க்கை நிரந்தரம் இல்லை என்பதை அறிந்த சில நடிகைகள் சினிமா தவிர, சைடு பிஸ்னஸிலும் கவனம் செலுத்தத் தொடங்கி விட்டனர்.
நடிகை ரம்யா கிருஷ்ணன் தன் தங்கையுடன் இணைந்து டி.வி தொடர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார். தமன்னாவுக்கு நகைகள் வடிவமைப்பதில் அதிக ஆர்வம். ‘ஒயிட் கோல்ட்’ நிறுவனம் மூலம் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார். அம்பிகா, ராதா இருவரும் சினிமா ஸ்டுடியோ மற்றும் நட்சத்திர ஓட்டல் பிஸினஸ் செய்கின்றனர். குஷ்பு டி.வி மற்றும் சினிமா தயாரிக்கிறார்.
ஜோதிகா, கணவர் சூர்யாவுடன் இணைந்து காற்றாலை மின்சார உற்பத்தியில் முதலீடு செய்துள்ளார். தேவயானி டப்பிங் ஸ்டுடியோ நடத்துகிறார். த்ரிஷா, நயன்தாரா, அனுஷ்கா, சமந்தா, ஹன்சிகா, காஜல் அகர்வால், சினேகா, விந்தியா, சந்தியா, ரோஜா, நமீதா, ஊர்வசி போன்றோர் ரியல் எஸ்டேட் பிஸினஸ் செய்கின்றனர்.
டி.வி நடிகை சந்தோஷி, மலையாள நடிகை காவ்யா மாதவன், தெலுங்கு நடிகை இலியானா போன்றோர் ஆடை வடிவமைப்பு மற்றும் பெண்களுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் கிடைக்கும் கடைகளை நடத்தி வருகின்றனர்.
நடிகை டாப்ஸி, தன் சகோதரி மற்றும் தோழிகளுடன் இணைந்து ‘வெட்டிங் பேக்டரி’ தொடங்கியுள்ளார். இதன் மூலம் ஒரு திருமணத்தை நடத்திக் கொடுக்கும் முழு பொறுப்பை ஏற்றுள்ளார்.
‘சினிமாவை அதிகமாக நம்ப முடியவில்லை. தினமும் புதுமுகங்கள் இறக்குமதி ஆவதால் எங்களுக்கு வாய்ப்பு கிடைப்பது கஷ்டமாகிவிட்டது. எங்கள் எதிர்காலம் கருதி சைடு பிஸினஸ் செய்கிறோம்’ என்கிறார்கள் சில முன்னணி ஹீரோயின்கள்.

No comments:
Post a Comment