அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையடைந்ததை அடுத்து இன்று, மே 23, முற்பகல் சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் மீண்டும் முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டனர்.
5வது முறையாக ஜெயலலிதா முதல்வராக பதவியேற்ற இவ்விழாவில், சில மாநில முதல்வர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அப்படி யாரும் பங்கேற்க வில்லை. மாறாக மத்திய அரசின் சார்பில், பொன். ராதாகிருஷ்னனும், பா.ஜ.க., சார்பில் எச்.ராஜா, இல. கணேசன் ஆகியோரும், பங்கேற்றனர். காலை 11 மணியளவில் பதவியேற்பு விழா நடந்தது. ஆளுநர் ரோசையா ஜெயலலிதாவுக்கும், புதிய அமைச்சர்கள் 28 பேருக்கும், பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
விழாவை அ.தி.மு.க.,வினர் திரளாக வந்து அமர்க்களப்படுத்தி இருந்தனர். அதே வேளை, தமிழ் திரையுலகின் சார்பில் சினி நட்சத்திரங்களும் விழாவில் பங்கேற்றிருந்தனர். குறிப்பாக, சூப்பர்ஸ்டார் ரஜினி காந்த், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் இருவரும் விழா நேரத்திற்கு முன்னரே வந்து முதல்வரிசையில் காத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இவர்களைத் தவிற, காமெடி நடிகர் மற்றும் திரைப்பட இயக்குனர் மனோபாலா, காமெடி நடிகர் விவேக், நடிகர் சிவகுமார், கார்த்தி, ஆனந்தராஜ், செய்தி வாசிப்பாளர்கள் பாத்திமா பாபு, நிர்மலா பெரியசாமி, நடிகர் தியாகு, நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா மற்றும் குயிலி, உள்ளிட்டோரும் விழாவில் பங்கேற்றனர். மேலும், இவ்விழாவிற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் என்.சீனிவாசன், மதுரை ஆதினம் ஆகியோரும் வந்திருந்தனர்.

No comments:
Post a Comment