வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா, ப்ரணிதா, பிரேம்ஜி உட்பட பலர் நடித்திருக்கும் படம் ’மாஸ்’. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். காமெடி கலந்த த்ரில்லர் படமாக உருவாகி உள்ள இப்படம் வரும் 29 ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.
இந்தப் படத்தில் சூர்யா மாசிலாமணி, ஷக்தி என்ற இரண்டு கேரக்டரில் நடித்திருக்கிறாராம். மாசிலாமணி ஜோடியாக ப்ரணிதாவும், ஷக்தி ஜோடியாக நயன்தாராவும் நடிக்கிறார்கள். ஒரு சூர்யா குறுக்கு வழியில் சம்பாதிக்க எதையோ செய்யப்போய் அவர் கொல்லப்பட அவரது ஆவி தன்னைப்போன்ற தோற்றம் கொண்ட ஷக்தியின் உடலுக்குள் புகுந்து பழிவாங்குகிற கதை தான் மாஸ் படமாம்.
சமீபத்தில் இப்படத்தின் பாடல்களும், டீசரும் வெளியாகி ரசிகர்ளிடத்தில் பெரிய வரவேற்பைப் பெற்றது. அதோடு படத்திற்கு சென்சாரில் யு சான்றிதழும் கிடைத்தது. பொதுவாக ஹாரர் படங்களுக்கு ஏ அல்லது யு/ஏ சான்றிதழ்தான் வழங்கப்படும். ஆனால் ‘மாஸ்’ படம் குடும்பத்துடனும், குழந்தைகளுடனும் பார்க்கும் வகையில் இருப்பதால் யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாம்.
படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்ததைத் தொடர்ந்து வரிச்சலுகையும் பெறுவதற்காக ‘மாஸ்’ படத்தின் டைட்டில் ‘மாஸ் என்கிற மாசிலாமணி’ என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாறிய டைட்டிலுடன் கூடிய புதிய போஸ்டர்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment