Friday, 1 May 2015

ஐ.பி.எல் 8: ராஜஸ்தானுக்கு பதிலடி கொடுத்த மும்பை அணி!!


ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் நேற்றைய 32வது ஆட்டத்தில் மும்பை அணி ராஜஸ்தான் அணியை 8 ரன்களால் அபார வெற்றியை பெற்றது. இவ்விரு அணிகளுக்கிடையிலான ஏற்கனவே நடைபெற்ற 9வது போட்டியில் ராஜஸ்தான் அணி 7விக்கட்டுக்களால் மாபெரும் வெற்றியை பெற்றது.
இந்த ஆட்டமானது மும்பை வான்கட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. அதனையடுத்து களமிறங்கிய மும்பை அணியின் ஆரம்பத் ஆட்டக்காரரான சிம்மோன்ஸ்சும் பார்த்தீவ் படேலும் மிகச் சிறப்பான ஆரம்பத்தை கொடுத்தனர். இதில் சிம்மோன்ஸ் (38) ரன்களையும், பார்த்தீவ் படேல் (23) ரன்களை அடித்து ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய உன்முக்த் சந்த் (13) ரன்களையும், அடுத்ததாக ஆடவந்த அணித்தலைவர் ரோகித் சர்மா (27) ரன்களையும், அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரரான களமிறங்கிய பொல்லார்டு (24) ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஆட்ட நேர முடிவில் மும்பை அணி 5விக்கட்டுக்களை இழந்து 187 ரன்களை எடுத்தனர். அந்த அணியின் நடுவரிசை ஆட்டக்காரரான களம் புகுந்த அம்பதி ராயுடு ஆட்டமிழக்காமல் அரைச்சதம் தாண்டி (53) ரன்களை எடுத்தார்.
ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சு சார்பில் தவால் குல்கர்னி 2விக்கட்டுக்களையும் கைப்பற்றினார் டீம் சௌத்தி ஜே. தரன், அன்கீட் சர்மா ஆகியோர் தலா 1விக்கட்டையும் வீழ்த்தினார் இதனைத் தொடர்ந்து 188 என்ற கடின ரன் இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஒவர்களில் 7விக்கட்டை இழந்து 179 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியின் ஆரம்பத் ஆட்டக்காரராக களமிறங்கிய அஜின்கியா ரஹானேயும் அணித்தலைவர் வாட்சனும் ஆடினர்.
இதில் ரஹானே (16) ரன்களையும் வாட்சன் (28) ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ஸ்டீபன் ஸ்மித் (23) ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த அணிக்கு ஆகக் கூடிய ரன்னாக சஞ்சு சாம்சன் அரைச்சதம் தாண்டி (76) ரன்களை எடுத்தார். ஏனைய வீரர்கள் குறைவான ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் ராஜஸ்தான் அணி 20 ஒவர்களில் 7விக்கட்டை இழந்து 179 ரன்களை அவர்களால் எடுக்க முடிந்தது.
மும்பை அணியின் பந்துவீச்சில் சார்பில் மிட்செல் மெக்கிலின்கன் 3விக்கட்டுக்களையும், மாலிங்கா, வினய் குமார், ஜே.சுஜீத் ஆகியோர் தலா 1விக்கட்டைக்களை கைப்பற்றினார். நேற்றைய போட்டியில் ஆட்டநாயகனாக ஆட்டத்தில் பிரகாசித்த அம்பதி ராயுடு தேர்வு செய்யப்பட்டார்.

No comments:

Post a Comment