Friday, 1 May 2015

’avengers age of ultron’ திரைப்படத்தை புறக்கணித்த ஜெர்மனி…!!


'அவென்ஜர்ஸ் ஏஞ் ஆப் அல்ட்ரான்' ’avengers age of ultron’ திரைப்படத்தை ஜெர்மனியிலுள்ள நூற்றுக்கணக்கான திரையரங்குகள் புறக்கணித்துள்ளன.
கடந்த 13 ஆம் தேதி வெளியான இப்படம் கடந்த வார இறுதிவரை உலகெங்கும் 280 மில்லியன் டாலர்களை வசூலித்தது. ஆனால், ஜெர்மனியில் நூற்றுக்கணக்கான திரையரங்குகளின் உரிமையாளர்கள் இப்படத்தை வெளியிட மறுத்துள்ளன. இப்படத்தை தயாரித்த, விநியோகித்த டிஸ்னி நிறுவனத்தினால் திரையரங்குகளுக்கான கட்டணம் அதிகரிக்ப்பட்டமையே இதற்கு காரணம்.
வழக்கமாக படங்களுக்காக டிஸ்னி நிறுவனம் திரையரங்க வசூலில் 47.7 சதவீதத்தை அறவிடும். ஆனால், அவென்ஜர்ஸ் படத்திற்கு 53 சவீதத்தை கோரியுள்ளது. இதனால் சிறிய திரையரங்குகளின் உரிமையாளர்கள் ஆத்திரமடைந்துள்ளனராம். இதனால் இப்படத்தை புறக்கணிக்க அவர்கள் தீர்மானித்துள்ளனர்.
ஜெர்மனியிலுள்ள 193 நகரங்கள் இப்புறக்கணிப்பினால் பாதிக்கப்பபட்டுள்ளன. புறக்கணிப்பு இல்லாவிட்டால் அங்கு 686 திரையரங்குகளில் இப்படம் வெளியிடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இப்படத்தில் ரொபர்ட் டோவ்வி ஜூனியர், கிறிஸ் ஹேம்ஸ்வேர்த், கிறிஸ் இவான்ஸ், மார்க் ரஃபலோ, ஸ்கார்லட் ஜொஹான்சன், ஆரோன் டெய்லர் ஜோன்சன், எலிஸபெத் ஒல்ஸன் இத்ரிஸ் எல்பா உட்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஜோஸ் வெதோன் இயக்கியுள்ளார். இப்படம் அமெரிக்காவில் நேற்று வெள்ளிக்கிழமையே வெளியானமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment