ஸ்மார்ட்ஃபோன் விற்பனையில் ஆப்பிள் நிறுவனத்தை வீழ்த்தி முதலிடத்தை பிடித்துள்ளது சாம்சங் நிறுவனம்.
இந்த வருடத்தின் முதல் காலாண்டில் ஆப்பிளை விட அதிக ஸ்மார்ட்ஃபோன்களை விற்று ஸ்மார்ட்ஃபோன் சந்தையில் முதலிடம் பிடித்துள்ளது.
இந்த வருடத்தின் முதல் காலாண்டில் ஆப்பிள் நிறுவனம் 61.2 மில்லியன் ஸ்மார்ட்ஃபோன்களை விற்றுள்ளது. இது மொத்த விற்பனையில் 18.2% சதவீதம் ஆகும்.
அதே போல சாம்சங் நிறுவனம் முதல் காலண்டில் 82.4 மில்லியன் ஸ்மார்ட்ஃபோன்களை விற்றுள்ளது. இது மொத்த விற்பனையில் 24.5% சதவீதம் ஆகும்.
இதனால் ஸ்மார்ட்ஃபோன் சந்தையில் ஐஃபோனை விட அதிக ஃபோன்களை விற்று சாம்சங் முன்னிலை வகிக்கின்றது. இதன் படி இந்த முதல் காலாண்டில் 337 மில்லியன் ஸ்மார்ட்ஃபோன்கள் விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

No comments:
Post a Comment