Friday, 1 May 2015

வை ராஜா வை எப்படி இருக்கிறது..? ஹிட்டா... ப்ளாப்பா..?


‘3’ படத்தைத் தொடர்ந்து ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியிருக்கும் படம் ‘வை ராஜா வை’.கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த், சதீஷ், விவேக் உட்பட பலர் நடித்திருக்கும் இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
கடல், என்னமோ ஏதோ என தனது முதல் 2 படங்களுமே சறுக்கிய நிலையில், ‘வை ராஜா வை’ தன்னை நிச்சயம் கைவிடாது என்ற நம்பிக்கையில் இருக்கிறார் கௌதம் கார்த்திக். அவருக்கு இப்படம் கைக்கொடுத்தா என்றால் சன்று சந்தேகம் தான் என்கிறார்கள்.. ஹாலிவுட்டில் வெளிவந்து வெற்றிபெற்ற ‘21‘ என்ற படத்தின் தழுவல்தான் இந்த ‘வை ராஜா வை’ என சில நாட்களாக இணையதளங்களில் செய்திகள் வெளியாகின.
ஆனால் அப்படத்தின் கதைக்கும் ‘வை ராஜா வை’ படத்தின் கதைக்கும் எந்த சம்பந்தமுமே இல்லையாம். வை ராஜா வை படத்தின் கதை என்னவென்றால், அடுத்து என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே அறியும் சக்தி படைத்தவர் ஹீரோ கௌதம் கார்த்திக் வருகிறார். அந்த சக்தியே அவருக்கு சிறுவயதில் ஒரு சில பிரச்சனைகளை உருவாக்க, அதை எங்கேயும் பயன்படுத்தக்கூடாது, யாரிடமும் இந்த விஷயத்தைப் பற்றி சொல்லக்கூடாது என முடிவு செய்கிறார்.
அதை தன் காதலி ப்ரியா ஆன்ந்திடம் கூட சொல்லாமல் ரகசியம் காக்கிறார் கௌதம். இந்நிலையில் இக்கட்டான சூழ்நிலை ஒன்றில் தன்னுடைய அந்த சக்தியைப் பயன்படுத்தி தன்னுடன் வேலை பார்க்கும் விவேக்கை ஆபிஸ் பிரச்சனையிலிருந்து மீட்கிறார் கௌதம் கார்த்திக். இதனால் விவேக்கிற்கு கௌதமிடமிருக்கும் பவர் தெரிந்து போகிறது.
அந்த பவரைப் பயன்படுத்தி நிறைய சம்பாதிப்பதற்காக விவேக் திட்டம் ஒன்றைப் போடுகிறார். அது கௌதம் கார்த்திக்கின் உயிருக்கே ஆபத்தாக முடிகிறது. அது என்ன திட்டம்? என்ன ஆபத்து..? என்பது மீதிக்கதை.. இப்படத்தை பார்த்த கையோடு சுடச்சுட தியேட்டரில் இருந்தவாரே டுவிட்டரில் விமர்சனம் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.
பாராட்டும் திட்டுமாக கமெண்டுகள் டுவிட்டரில் குவிகின்றன. அதிலும் ஒரு ரசிகர் படத்தை பார்த்துவிட்டு ரஜினி வாழ்க்கை பூரா கஷ்டப்பட்டு நடிச்சு சம்பாதிச்ச பணத்தை எல்லாம் பொண்ணு இப்படி காசை கரியாக்குது. அய்யோ பாவம் # வை ராஜா வை ஃபிளாப் என்று டுவிட் செய்துள்ளார்.
அதிலும் ஒரு ரசிகை வை ராஜா வை படத்தின் இயக்குநர் பெண் என்பதால்தான் ஒரு ஆணை (எஸ்.ஜே சூர்யா) ஐட்டம் பாடலுக்கு ஆட வைத்திருக்கிறார் என்று டுவிட் செய்துள்ளார். இன்னொரு ரசிகர் உத்தம வில்லன் ரிலீஸ் ஆகலை... எனவே வேற வழியே இல்லாம எல்லாரும் வை ராஜா வை போறாங்க என்று பதிவிட்டுள்ளார் ஒருவர். இவர்களின் டுவிட்களில் இருந்தே தெரிந்திருக்கும் படம் ஹிட்டா... ப்ளாப்பா..? என்று...

No comments:

Post a Comment