Friday, 1 May 2015

ஐ.பி.எல் 8: பஞ்சாப்பை பந்தாடி 4–வது வெற்றியை சுவைத்த டெல்லி அணி!!


ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற 31வது ஆட்டத்தில் டெல்லி அணி பஞ்சாப் அணியை 9விக்கட்டுக்களால் அபார வெற்றியை பெற்றது. இந்தப் போட்டியானது டெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி அணியும், பஞ்சாப் அணியும் மோதின. நேற்றைய ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி அணித்தலைவர் டுமினி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணியின் ஆரம்ப ஆட்டக்காரரான ஷேவாக்கும், மனேன் வோராவும் ஆடினர். இதில் முதல் ஒவரில் 2வது பந்திலே ஷேவாக் (1) ரன்களில் ஆட்டமிழந்தார் இதனையடுத்து களமிறங்கிய ஷான் மார்ஷ் (5) ரன்களையும், அடுத்து மனேன் வோரா (1) ரன்களையும், அடுத்ததாக சஹா (3) ரன்களை எடுத்து தொடர்ச்சியாக ஆட்டமிழந்த வேளையில் பஞ்சாப் அணியின் மொத்த ரன்களாக 10 ரன்களுக்குள் 4 விக்கட்டுக்களை இழந்து தடுமாறிக் கொண்டிருந்த போது களமிறங்கி அணித் தலைவர் பெய்லி (18) ரன்களை அடித்து சற்று நிலைத்து நின்று ஆடினார்.
அதன் பின் களமிறங்கிய பெரேரா (3) ரன்களில் ஆட்டமிழந்தார் இந்த வேளையில் களமிறங்கிய மில்லர் மற்றும் அக்ஷர் படேல் ஜோடியானது மிக நிதானமாக ஆடினர். இதனால் பஞ்சாப் அணி 100 ரன்களை எடுத்தது. அந்த அணி தடுமாறிக் கொண்டிருந்த வேளையில் ரன்களை உயர்த்திய அக்ஷர் படேல் (22) ரன்களையும் மற்றுமொரு ஆட்டக்காரரான மில்லர் (42) ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர்.
ஆட்டநேர முடிவில் பஞ்சாப் அணி 20 ஒவர்களில் 8விக்கட்டுக்களை இழந்து 118 ரன்களை எடுத்தது. அந்த அணியின் இறுதி ஆட்டக்காரரான ஆட்டமிழக்காமல் ஷாதுல் தாகூர் (7) ரன்களையும், அனுரீட் சிங் (8) ரன்களை எடுத்திருந்தனர். டெல்லி அணியின் பந்துவீச்சில் சார்பில் கோல்ட்டர் நைல் 4விக்கட்டுக்களையும், ஜாகீர் கான் 2விக்கட்டுக்களையும், டுமினி, அமிட் மிஷ்ரா ஆகியோர் தலா 1விக்கட்டுக்களை கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து 119 ரன்களுடன் களமிறங்கிய டெல்லி அணி 1விக்கட்டை இழந்து 13.5 ஒவர்களில் 119 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் ஆரம்ப ஆட்டக்காரரான களமிறங்கிய அகர்வாலும் ஸ்ரேயாஷ் அய்யரும் மிகச் சிறப்பான ஆரம்பத்தை கொடுத்தனர். இதில் ஸ்ரேயாஷ் அய்யர் அரைச்சதம் தாண்டி (54) ரன்களில் ஆட்டமிழக்க அவரைத் தொடர்ந்து மிகச் சிறப்பாக ஆடிய மயான் அகர்வால் ஆட்டமிழக்காமல் அரைச்சதம் தாண்டி (52) ரன்களையும் அவருடன் ஜோடி சேர்ந்த திவாரி ஆட்டமிழக்காமல் (5) ரன்களை அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
இதேவேளை டெல்லி அணி 13.5 ஒவர்களில் 1விக்கட்டை இழந்து 119 ரன்களை எடுத்தது. பஞ்சாப் அணியின் பந்துவிச்சில் ஷாதுல் தாகூர் மட்டும் 1விக்கட்டை மட்டும் கைப்பற்றினார் நேற்றைய போட்டியில் ஆட்டநாயகனாக பந்துவீச்சில் 4விக்கட்டுக்களை கைப்பற்றிய கோல்ட்டர் நைல் தேர்வு செய்யப்பட்டார்

No comments:

Post a Comment