கர்நாடகத்தைச் சேர்ந்த புகழ் பெற்ற ஆர்.கே.லட்சுமணன் புனேவில் நேற்று காலமாணார். அவரது உடல் இன்று புனேவில் நடைபெறுகிறது. கிட்டத்த்டட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக, காமன் மேன் (Common Man) என்ற கார்டூன் வாயிலாக அரசியல்வாதிகள் குறித்து சமூகத்தில் நடப்பன வற்றை பத்திரிக்கைகளில் வெளிப்படுத்தியவர் ஆர்.கே லட்சுமணன். பத்திரிக்கை உலகில் புகழ் பெற்ற இவரது தந்தை சென்னையில் பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியராக இருந்தவர்.
மேலும் இவரது 5 சகோதரர்களில் ஒருவரான ஆர்.கே. நாராயணன் புகழ் பெற்ற எழுத்தாளருமாவார். 1921ம் ஆண்டு அக்டோபர் மாதம், 24ம் தேதி மைசூரில் பிறந்தார் ஆர்.கே.லட்சுமணன். சிறு வயதில் வீட்டில் சுவர், கதவுகளில் கிறுக்கல்களாகத் தொடங்கிய இவரது கேலிச்சித்திரங்கள், நாளடைவில், நாட்டு நடப்பை மக்களிடத்தில் எடுத்துரைக்கும் கார்டூன்களாக மாறின.
பள்ளிப்படிப்பிற்குப் பின், ஓவிய ஆர்வத்தில், மும்பை ஓவியக் கல்லூரியில் சேர முயன்றார். ஆனால், அங்கு இடம் கிடைக்காததால் பி.ஏ., படித்தார். படிக்கும் போதே, பகுதி நேர வேலை போல, கன்னட வார இதழ் ஒன்றுக்கு கேலிச்சித்திரம் வரைந்து கொடுத்து வந்தார். இவரது கார்டூன்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க, தொடர்ந்து டைம்ஸ் ஆப் இந்தியாவில் கார்டூனிடாக சேர்ந்தார்.
மக்களிடத்தில் லட்சுமனனின் கார்டூன்கள் நீங்கா இடம் பிடித்தன. இதை அடுத்து, 'Common Man' என்ற சாமானிய மனிதன் ஒருவனின் பார்வையில் சமூகம் படும் அவஸ்தைகளை நாசூக்காக எடுத்துக் கூறினார். அரசியல்வாதிகளுக்கும், அரசுக்கும் பிரச்னையின் உண்மைத் தன்மையை அற்புதமாக வெளிப்படுத்துவதுடன் யார் மனதையும் புன்படுத்தக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தார் லட்சுமணன்.
இவரது இந்த கண்னியமான சித்திரங்கள், பத்ம விபூஷன் விருதை வாங்கிக் கொடுத்தன. பத்திரிகை மற்றும் இலக்கியத் துறையில் சிறந்த பங்களிப்பு வழங்கியவர்களுக்கான மகசேசே விருதினையும் ஆர்.கே. லட்சுமணன் பெற்றுள்ளார். 2003ம் ஆண்டு லட்சுமணன் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். இதனால் அவரது இடது புற உறுப்புகள் செயலிழந்தன. இதனால், சித்திரம் வரைவதையும் குறைத்துக் கொண்டார்.
இறுதியாக, சிறுநீரக நோய்க்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது உயிர் இழந்தார் லட்சுமணன். சாதாரண மனிதனாக அவர் மறைந்திருந்தாலும், பத்திரைக்கை உலகில் ”சாமானிய மனிதராக” என்றும் வாழ்ந்து சமூக நலன்களை எடுத்துக் கூறுவார் லட்சுமணன்.

No comments:
Post a Comment