Tuesday, 27 January 2015

நான், என்னை, நீ...அப்படி வர்ற மாதிரி எதுவும் வைக்காதீங்க.. அஜித் போட்ட கண்டிஷன்..!


கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் என்னை அறிந்தால் படம் பற்றி ஒரு சுவாரஸ்ய தகவல் வெளிவந்திருக்கிறது. வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ரிலீஸாகும் என்னை அறிந்தால் படத்தின் தலைப்பிற்காக அஜித் கண்டிஷன் ஒன்றை கெளதம் மேனனிடம் போட்டிருந்தாராம்.
அஜித் நடிப்பில் வெளிவந்த “ஆரம்பம், வீரம்” ஆகிய படங்களின் தலைப்புகள் படப்பிடிப்பு ஆரம்பமான பிறகுதான் வைக்கப்பட்டன. அதேப்போல 'என்னை அறிந்தால்' படத்தின் தலைப்பு கூட படம் ஏறக்குறைய முடிவடையும் நிலைக்கு வந்த பிறகுதான் அறிவிக்கப்பட்டது. அப்படி ஒரு தலைப்பை வைப்பதற்குக் கூட முதலில் அஜித் தயங்கினாராம். இந்த தகவலைஇப்போது தான் இயக்குநர் கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.
“படத்துக்கு முதல்ல என்ன மாதிரி தலைப்பு வைக்கலாம்னு பேசிட்டிருக்கும் போது, அஜித் சார், “நான், என்னை, நீ...அப்படி வர்ற மாதிரி எதுவும் வைக்காதீங்கன்னு சொன்னாரு. அப்புறம் எந்த மாதிரி இருந்தால் நல்லா இருக்கும்னு யோசிச்ச பிறகு எனக்கு இந்த தலைப்பு தோணுச்சி. சரின்னு அஜித் சார் கிட்ட, கதைக்குப் பொருத்தமா இந்த தலைப்பு இருக்கும்னு சொன்னேன். அவரும் சரின்னு சம்மதிச்சாரு. 'என்னை அறிந்தால்....'ங்கறத அடுத்து நீங்க எப்படி வேணாம் பிக்ஸ் பண்ணிக்கலாம்.
'என்னை அறிந்தால்...நீ என்னுடன் மோத மாட்டாய், 'என்னை அறிந்தால்...நீ தாங்க மாட்டாய்...' இப்படி எது வேணாலும் மீதி நீங்க எழுதிக்கலாம். கதைக்குப் பொருத்தமான, ஒரு பவர் ஃபுல்லான தலைப்பா இது இருக்கும், படம் பார்க்கும் போது உங்களுக்கு அது புரியும்,” என்றார் இயக்குநர் கௌதம் மேனன்.
மேலும் படத்தை பற்றி கூறுகையில், இது ஒருதனிநபரின் வாழ்க்கைப்பயணம் என்று சொல்லலாம். 13 வயதிலிருந்து சுமார் நாற்பத்தைந்து வயதுவரையிலான ஒருவரது வாழ்க்கையை இந்தப்படத்தில் சொல்லியிருக்கிறோம். நம்முடைய இந்தப்பருவத்தில் எவற்றையெல்லாம் நாம் கடந்து வந்திருப்போமோ அவற்றோடு திரைப்படத்துக்கான ஒருசில விசயங்களும் சேர்ந்ததுதான் என்னை அறிந்தால் படம் என்றார்.

No comments:

Post a Comment