Tuesday, 27 January 2015

ஜன-30ல் ரிலீஸாகும் 8 படங்கள்.. கடந்த ஆண்டு ரெக்கார்ட்டை மிஞ்சுமா..? தமிழ் சினிமா...?


ஜனவரி மாதத்தின் கடைசி வெள்ளியான வரும் 30ஆம் தேதி மட்டும் 8 படங்கள் வெளிவர இருக்கின்றன. எஸ்.ஜே. சூர்யாவின் இசை, எஸ் ஏ சந்திரசேகரனின் டூரிங் டாக்கீஸ், தரணி, கில்லாடி, புலன் விசாரணை 2, பொங்கி எழு மனோகரா ஆகிய 8 படங்கள் தான் அந்தப்படங்கள்.
இந்த எட்டு படங்களையும் சேர்த்து ஜனவரி மாதம் மட்டும் 17 படங்கள் வெளியாகியுள்ளன. இப்படியே போனால் கடந்த ஆண்டின் சாதனை முறியடித்து விடும் போல தமிழ் சினிமா. கடந்த ஆண்டு மொத்தம் 215 படங்கள் தயாரித்து சாதனைப் படைத்தது தமிழ் சினிமா..
தமிழ் சினிமா வரலாற்றிலேயே இத்தனைப் படங்கள் எந்த ஆண்டும் வெளியானதில்லை. வாரத்துக்கு சராசரியாக நான்கு படங்களுக்கு மேல் ரிலீஸாகும் நிலைமை. ஆனால் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகியுள்ள படங்களைப் பார்த்தால் தலை கிறுகிறுத்துப் போய்விடும் போல. அதுமட்டுமல்லாமல் அடுத்த மாத ரிலீஸுக்காக என்னை அறிந்தால், கொம்பன், அனேகன், காக்கி சட்டை உட்பட பல படங்கள் வரிசையில் நிற்கின்றன.
இந்த வேகத்தில் போனால் இந்த ஆண்டு தமிழ் சினிமா 250 படங்களை வெளியிட்டாலும் ஆச்சரியமில்லை. காரணம், ஏற்கெனவே சென்சாராகி வெளியாகாமல் உள்ள 600 படங்களில் 100 படங்கள் வெளியானால் கூட பெரிய சாதனை படைத்துவிடும் தமிழ் சினிமா. ஆனால் இவை அனைத்தும் வணிக ரீதியான வெற்றியைப் பெறுமா..? தரமான படமாக இருக்குமா..? என்பதுதான் பெரிய கேள்விக்குறி...?

No comments:

Post a Comment