இணையத்தில் தற்போது வைரலாக பரவிக் கொண்டிருக்கும் விஷயம். வாட்ஸ் அப்பின் புது அப்டேட் தான்.
வாட்ஸ் அப்பினை இனி Browser-லும் பயன்படுத்தலாம் என அந்நிறுவனம் அறிவிதுள்ளது. பலர் பயன்படுத்தவும் தொடங்கிவிட்டனர். ஆனால் இதில் இருக்கும் பிரச்சனைகள் அல்லது குறைபாடுகள் என்னென்ன தெரியுமா??
வாட்ஸ் அப்பினை கணினியில் ஐபோன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியாது. ஆப்பிள் நிறுவனத்தின் கெடுபிடி காரணமாக தங்களால் இன்னும் அதற்கான் ப்ரோக்ராமை உருவாக்குவதில் சிறிது சிரமம் ஏற்பட்டுள்ளதாக வாட்ஸ் அப் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொபைலிலும் நெட் கனெக்ஷன் இருக்க வேண்டும். அதாவது உங்கள் வாட்ஸ் அப் அக்கவுண்டினை உங்கள் பிரவுசரில் லாக் இன் செய்த பின்னும் உங்கள் மொபைலில் நெட் கனெக்ஷன் இருக்க வேண்டும். உங்கள் மெபைலில் நெட் கனெக்ஷன் கட் ஆகிவிட்டால் கணினியிலும் ஆஃப் லைன் சென்றுவிடும்.
கூகுள் பிரவுசரில் மட்டுமே பயன்படுத்த முடியும். தற்போது இவர்கள் அறிமுகப்படுத்தியுள்ள தொழில்நுட்பத்தில் வாட்ஸ் அப்பினை கூகுள் க்ரோம் பிரவுசரில் மட்டுமே பயன்படுத்தமுடியும். ஃபயர்ஃபாக்ஸ், இன்டெர்நெட் எக்ஸ்ஃப்ளோரர் போன்றவற்றில் பயன்படுத்த முடியது.
யூசர்களை பிளாக் செய்ய முடியாது. நீங்கள் யாரையேனும் பிளாக் செய்யவேண்டுமெனில் நீங்கள் மொபைலில் மட்டுமே செய்ய முடியும்.
குரூப்பினை உருவாக்க முடியாது. மொபைலில் இருப்பது போல் வெப் வெர்ஷனில் உங்களால் ஒரு குரூப்பினை உருவாக்கவோ அல்லது குரூப்பில் இருந்து வெளியேறவோ முடியாது.

No comments:
Post a Comment