இந்த வார பாக்ஸ் ஆபிஸையும் பொங்கலுக்கு வந்த படங்களே ஆக்கிரமித்திருக்கின்றன. கடந்த வாரம் எதிர்பார்க்கும் படியான எந்தப் படங்களும் ரிலீஸாகவில்லை என்பதால் ஐ, ஆம்பள, டார்லிங் படங்களே வசூலை குவித்து வருகின்றன.
தற்போது இப்படங்கள் வெளிவந்து 2 வாரங்கள் ஆன நிலையில் சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்கள் வெளிவந்துள்ளது. இதில் எல்லோரும் எதிர்ப்பார்த்தது போல் ஐ படம் ரூ 6.88 கோடி வசூல் செய்து முதல் இடத்தை தக்க வைத்துள்ளது.
இரண்டாவது இடத்தில் 1.22 கோடி வசூல் செய்து ஆம்பள படம் உள்ளது. டார்லிங் படம் ரூ 72 லட்சம் வசூல் செய்து மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த வாரம் வெளியான ’தொட்டால் தொடரும்’ படம் பாக்ஸ் ஆபிஸீல் சொல்லுக்கொள்ளும் படி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment