சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகியான குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர்களில் ஒருவரான ராஜ் குந்த்ரா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகி குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர்களில் ஒருவரான ராஜ் குந்த்ரா ஆகியோர் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
அதோடு, என். சீனிவாசன் மீதான குற்றத்திற்கு ஆதாரம் இல்லாத போதும், வர்த்தக நோக்கத்துடன் செயல்பட்டுள்ளதால் அவரை பிசிசிஐ தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று தடை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம். சீனிவாசனின் மருமகன்தான் குருநாத் மெய் யப்பன் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2013ம் ஆண்டு நடந்த ஐபிஎல் கிரிகெட் போட்டியைச் சார்ந்து மேட்ச் பிக்ஸிங் மற்றும் கிரிகெட் சூதாட்டம் போன்றவை நாடெங்கிலும் நடந்தன. இந்தனை விசாரிக்க முகுல் முத்கல் என்ற கமிட்டியை உச்ச நீதிமன்றம் அமைத்தது.
சில மாதங்களுக்கு முன், உச்ச நீதிமன்றத்தில், இந்த கமிட்டி அதன் விசாரணை அறிக்கையை சமர்பித்தது. இதனடிப்படையில், நேற்றைய முந்தினம், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தாகூர், கலிபுல்லா ஆகி யோர் அடங்கிய அமர்வு 130 பக்கங்கள் அடங்கிய தீர்ப்பை பிறப்பித்தது.
இந்த தீர்பில், ஐபிஎல் சூதாட்டம் தொடர்பான பிசிசிஐயின் விசாரணைகளும் நடவடிக்கைகளும் சட்டத்துக்கு உட்பட்டதுதான் என்றும் குருநாத் மெய் யப்பன், ராஜ் குந்த்ரா ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை அடுத்து, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ள குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா ஆகியோரின் தண்டனையை நிர்ணயிக்க, முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான ஒரு சிறப்புக் குழுவை நியமித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
குற்றவாளிகளுக்கான தண்டையுடன், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய ஐபிஎல் அணிகளின் எதிர்காலத்தையும் இந்த குழுதான் நிர்ணயிக்க உள்ளது. அடுத்த ஆண்டு 12 ஆயிரம் பெட்டிங் இந்நிலையில், வரும் ஆண்டு நடக்க உள்ள ஐபில் 8ல் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் வரை, சூதாட்டப் புழக்கத்தில் இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, கடந்த 2014ம் ஆண்டு ஐபிஎல் 7ல் சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய் பெட்டிங் செய்யப்பட்டது. இதில் சூதாட்டத்தில் சம்பந்தப்பட்ட பணம் வருடம் முழுவதும், சிறு சிறு தொகைகளாக இந்தியாவின் முக்கிய நகரங்கள் சிலவற்றிற்கு வந்து, அங்கிருந்து உரியவர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
மேலும், நிழலுலக தாதா தாவுத் தலைமையிலான குழுதான், சூதாட்டத்தில் சுமார் 40 சதவீத பணத்திற்கு உரிமை கொண்டதாம். ஐபிஎல் மட்டுமல்லாது, வங்காள தேச கிரிகெட் லீக் போட்டிகளை மையமாக வைத்தும் இந்த கிரிகெட் மெட் பிக்ஸிங் மற்றும், சூதாட்டம் உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.

No comments:
Post a Comment